எனக்கு சினிமா பேக்ரவுண்ட் இல்ல.. அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓப்பனாக பேசிய பிரியா பவானி ஷங்கர்..!

சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே திரை துறையின் மீது ஆர்வம் கொண்டு அதில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று முயற்சி செய்து வந்தார் பிரியா பவானி சங்கர்.

அந்த வகையில் அவருக்கு செய்தி வாசிப்பாளராக முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு சீரியல்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அதில் பிரபலமாகி வந்த பிரியா பவானி சங்கருக்கு மேயாத மான் திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மேயாத மான் படத்தில் அறிமுகம்:

மேயாத மான் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் அதிக சம்பளம் வாங்காத ஒரு நடிகையைதான் கதாநாயகியாக அந்த படத்திற்கு தேடி வந்தனர். அந்த வகையில் அவருக்கு பிரியா பவானி சங்கர் சரியான பொருத்தமாக இருந்தார்.

எனவே அவரை நடிக்க வைத்தனர். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அது நல்ல கதைகளை கொண்டிருந்தது. எஸ்.மது என்கிற அந்த கதாபாத்திரம் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருந்ததால் ப்ரியா பவானி சங்கர் அந்த திரைப்படத்தின் மூலமாக அதிகமான வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து அவருக்கு எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடித்த மான்ஸ்டர் திரைப்படத்திலும் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் பிரியா பவானி சங்கர் தற்சமயம் இந்தியன் திரைப்படத்திலும் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் விளக்கம்:

இதனை தொடர்ந்து இனி அவருக்கு பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் ஒரு பேட்டியில் அவரிடம் சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இருப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதில் சின்ன திரையில் இப்போது வரை இருப்பதால் உங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் வந்திருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர் என்னுடைய 17 வயதில் நான் திரைத்துறைக்கு வந்தேன்.

அதிலிருந்து இப்போது வரை என்னிடம் பழகும் அனைவரும் நல்ல விதத்தில்தான் பழகுகிறார்கள். யாரும் என்னை அந்த மாதிரியான விஷயங்களுக்கு அழைத்தது கிடையாது. எனக்கு தனிப்பட்ட முறையில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் என்பது நடந்தது கிடையாது. ஆனால் மற்ற நடிகைகளுக்கு நடந்திருக்கிறதா? என்றால் நடந்திருக்கிறது.

 நிறைய பேர் என்னிடம் இது குறித்து கூறியிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது ஒரு சாய்ஸ்தான் அது சரியா தவறா என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் சினிமாவில் அது இருக்கிறது என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version