எனக்கு போட்டியே இந்த 4 நடிகைகள்தான்!.. பெரிய நடிகைகளை லிஸ்டில் சேர்த்த ப்ரியா பவானி சங்கர்.. தைரியம் கொஞ்சம் ஜாஸ்திதான்!.

பிரபல தொகுப்பாளியாக இருந்து அதற்குப் பிறகு சின்ன திரையில் பிரபலமாகி அதன் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகை ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

பெரும்பாலும் பெரிய பவானி சங்கர் கொஞ்சம் ஓபன்னாக பேசக்கூடியவர் என்று கூறலாம். நடிகைகள் பேட்டிகள் கொடுக்கும் பொழுது எப்பொழுதுமே சினிமா குறித்து பல முக்கிய விஷயங்களை பேச மாட்டார்கள். இலை மறை காயாகவோ அல்லது மறைத்தோதான் விஷயங்களை பேசுவார்கள்.

ஏனெனில் அப்படியாக வெளிப்படையாக பேசுவது என்பது அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக அவர்களுடைய போட்டி நடிகைகள் யார் என்பதை எந்த ஒரு நடிகையும் கூற மாட்டார்கள்.

பெரும் நடிகைகளே தயக்கம்:

ஏனெனில் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நினைப்பார்கள். நயன்தாரா மாதிரியான நடிகைகள் கூட சின்ன தொலைக்காட்சிகளில் நிறைய பேட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். அப்படியான பேட்டிகளில் அவர்களிடம் இதே மாதிரி அவர்களுடைய போட்டி நடிகைகள் யார் என்று கேட்ட பொழுது அவர்கள் அதற்கு பதில் அளித்தது கிடையாது.

சினிமாவில் என்னதான் போட்டியிருந்தாலும் கூட வெளியில் நடிகைகள் அதைக் குறித்து பேசிக் கொள்வது கிடையாது. ஆனால் பிரியா பவானி சங்கர் அதையுமே ஓப்பனாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் ப்ரியா பவானி சங்கர் கூறும் பொழுது என்னுடைய முதல் போட்டி நடிகை என்றால் அது நடிகை கீர்த்தி சுரேஷ்.

மாமன்னன் மூலமாக வேற திரும்பவும் அவர் கம்பேக் கொடுத்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சாய் பல்லவி ஆகிய நான்கு நடிகைகளும் தனக்கு போட்டி நடிகைகளாக இருப்பதாக பிரியா பவானி சங்கர் கூடியிருக்கிறார்.

சர்ச்சையை கிளப்பிய பிரியா பவானி சங்கர்:

ஆனால் உண்மையில் பார்க்கும் பொழுது பிரியா பவானி சங்கரை விடவுமே பிரபலமான நடிகைகளாக இவர்கள் நால்வரும் இருப்பதை பார்க்க முடிகிறது முக்கியமாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சாய் பல்லவி இவர்கள் மூவருமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

ஆனால் பிரியா பவானி சங்கரை பொருத்தவரை அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளங்களை அவர் தேர்ந்தெடுப்பது கிடையாது. இந்தியன் 2 திரைப்படத்தில் கூட பிரியா பவானி சங்கருக்கு அவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பது இருக்கவில்லை.

அப்படி இருக்கும் பொழுது அவரைவிட பெரும் நடிகைகளாக இருப்பவர்களை லிஸ்டில் சேர்த்து இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version