இது வேணும் என்பதற்காக காதலில் இருப்பது மடத்தனம்.. பிரியா பவானி ஷங்கர் அதிரடி..!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே புதிய தலைமுறை சேனலுக்கு தொகுப்பாளராக பணிபுரிய வந்துவிட்டார் பிரியா பவானி சங்கர்.

செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த இவர் பிறகு நிறைய டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அப்படி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

பிரியா பவானி ஷங்கர்

பிறகு சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலமாக சீரியலில் நடிகை ஆவதற்கான வாய்ப்பை பெற்றார் பிரியா பவானி சங்கர். சீரியல்களில் நடித்து ஓரளவு பிரபலமான பிறகு மேயாத மான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்கள் எளிதாக சினிமாவில் வாய்ப்புகள் பெற்று விடுவது கிடையாது. ஆனால் பிரியா பவானி சங்ருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா பவானி சங்கர் அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையிலும் மிக அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

காதலில் இருப்பது மடத்தனம்

பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களாக மட்டுமே தேர்ந்தெடுத்து வந்தார் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் அடுத்து அவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் நிறைய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.

அந்த திரைப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகதான் இருந்தது. அதற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் என்று பல படங்களில் நடித்தார் பிரியா பவானி சங்கர். கல்லூரி காலம் முதலே ப்ரியா பவானி சங்கர் ஒருவரை காதலித்து வருகிறார்.

பிரியா பவானி ஷங்கர் அதிரடி

அவரை தான் அடுத்த வருடம் திருமணமும் செய்து கொள்ள போவதாக கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவிலேயே கதாநாயகியாக நடிக்கும் ஒரு நடிகை சாதாரண நபரை காதலித்து திருமணம் செய்கிறார் என்றால் அது பிரியா பவானி சங்கர்தான்.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் நீண்ட நாள் காதல் குறித்து அவரது பேட்டியில் கூறியிருந்தார். அதில் ப்ரியா பவானி சங்கர் கூறும் பொழுது ஒரு காதல் ரொம்ப நாளைக்கு ஒருவரை காதலிக்கிறோம் என்பதால் மட்டுமே நாம் அவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று தேவையில்லை.

காதலிக்கும் பொழுது எந்த ஒரு நிலையிலும் நம்முடைய உறவு சரியில்லை என்று தோன்றுகிறது என்றால் பிரிந்து விடுவது நல்லது. ரொம்ப நாட்களாக காதலித்து விட்டோமே என்று தயவு தாட்சனை பார்க்க கூடாது எப்போது அந்த உறவு உங்களுக்கு வேதனை அளிப்பதாக மாறுகிறதோ அப்பொழுதே பிரிந்து விடுவது நல்லது என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version