55 வயது நடிகருடன் காதலா!.. உண்மையை உடைத்த நடிகை ப்ரியா பவானி சங்கர்!..

சின்னத்திரை மூலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்லூரி படிப்பை முடித்த பிறகு தொடர்ந்து சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் பிரியா பவானி சங்கரின் ஆசையாக இருந்தது.

ஆனால் எந்த நடிகைகளுக்கும் எடுத்த உடனே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடாதே, அதிகபட்சம் மாடலிங் துறையின் மூலமாகதான் பெண்கள் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமாகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் சின்னத்திரையில் வாய்ப்பை தேடிச் சென்றார் பிரியா பவானி சங்கர்.

55 வயது நடிகருடன் காதல்:

ப்ரியா பவானி சங்கருக்கு ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராகதான் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளையும் பெற்றார் பிரியா பவானி சங்கர். புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிறகு அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

ஒரு சில சீரியல்களில் நடித்த பிறகுதான் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. முதன்முதலாக மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரியா பவானிசங்கர். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது அதிகரிக்கத் துவங்கியது.

தொடர்ந்து அவர் நடித்த மான்ஸ்டர் மாதிரியான எல்லா திரைப்படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

உண்மையை உடைத்த நடிகை:

மேலும் டிமான்டி காலனி 2 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் இந்த படத்திற்காக பிரமோஷன் பேட்டிகள் நிறைய கொடுத்து வந்தார். அப்பொழுது பொம்மை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்த ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது ஏற்கனவே எஸ்.ஜே சூர்யாவுடன் சேர்ந்து மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதேபோல பொம்மை திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தேன். அப்பொழுது எனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக நிறைய சர்ச்சைகள் வெளியில் வந்து கொண்டிருந்தன.

இந்த விஷயம் நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் காதுகளுக்கும் சென்றது. நான் இது குறித்து அவரிடம் பேசிய பொழுது அவர் என்னிடம் இப்பொழுதுதான் மீண்டும் எழுந்து வருகிறேன் மீண்டும் துவங்கி விட்டார்களா என்று கூறினார், என்று அந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் தொடர்ந்து இந்த மாதிரியான சர்ச்சை பேச்சுகளுக்கு ஆளாகிதான் சினிமாவில் இருந்தவர் பிறகு ஃபீல்ட் அவுட் ஆனார் அதனை குறிக்கும் விதமாகவே எஸ்.ஜே சூர்யா இப்படி பேசி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version