யாரு கூட வேணாலும் போயிடுவேணா..? மோசமான கமெண்ட்.. பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலடி..!

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக திகழ்ந்த பிரியா பவானி ஷங்கர் மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சின்னத்திரையில் இது போல தொகுப்பாளினியாக திகழும் பலரும் வெள்ளி திரையில் களை கட்டி வருகிறார்கள்.

அந்த வரிசையில் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன் முதல் பிரியா பவானி ஷங்கர் வரை திரைப்படங்களில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்கள்.

நடிகை பிரியா பவானி ஷங்கர்..

பிரியா பவானி ஷங்கரை பொருத்த வரை கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் ஆரம்பத்தில் நடித்ததை அடுத்த தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது

இதனை அடுத்து 2017 – ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கேரக்டர் ரோலை செய்த இவருக்கு 2018 – இல் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட இவருக்கு அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேர 2019-ல் மான்ஸ்டர், 2020-இல் மாஃபியா, 2021-இல் களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மன பெண்ணே போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 2022-இல் ஹாஸ்டல், யானை, குருதியாட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச்சான இவர் 2023-இல் அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை, இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து அனைவரையும் அசத்தினார்.

யாரு கூட வேணும்னாலும் போயிடுவேனா..?

பிரியா பவானி ஷங்கர் கல்லூரியில் படிக்கும் காலம் முதல் ஒருவரை காதலித்து வருகிறார். அவர் பெயர் ரத்தினவேலு அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சோம்பேறித்தனத்தால் தான் இவர்களது திருமணம் தள்ளிப் போய் உள்ளது என்ற விஷயங்கள் இணையங்களில் புகைத்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

மேலும் இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக டிமான்டி காலனி 2 படத்தின் ப்ரமோஷனுக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தது நினைவில் உள்ளதா?

இந்நிலையில் இவரைப் பற்றி வதந்தி செய்திகள் பல நடிகர்களோடு இணைத்து வெளி வந்த போதும் அது குறித்து எந்த விதமான கவலையும் இல்லாமல் தனது கேரியரில் கவனத்தை செலுத்தி வரும் பிரியா பவானி ஷங்கர் ஹாப்பி பர்த்டே போஸ்ட் போட்டாலே போதும்.. எனக்கும் அந்த ஹீரோவுக்கும் இடையே காதல் என்று எழுதுவதாக சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலும் இவர் ஹரிஷ் கல்யாண் மற்றும் அசோக் செல்வனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போட்ட பிறகு இது போன்ற கிசுகிசுக்கள் வெளி வந்ததை சொல்லி இருப்பதோடு நல்லவேளை இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று பெருமூச்சு விட்டார்.

அது மட்டுமல்லாமல் யாரோட போட்டோவை எடுத்து நான் போட்டாலும் நான் அவங்களோடு போய்விடுவேனா.. இப்படித்தான் என்னை பலரும் நினைக்கிறார்கள். மேலும் மோசமான கமாண்டுகளை போடுகிறார்கள் இதைப் பார்த்து என் மனசு தாங்கவில்லை என்று புலம்பி இருக்கிறார்.

மோசமான கமெண்டுக்கு பதிலடி..

இதனை அடுத்து இது போன்ற மோசமான கமாண்டுகளை போடக்கூடியவர்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் பிரியா பவானி ஷங்கரின் புலம்பல் உள்ளது என்று சொல்லலாம்.

இந்த புலம்பலை கேட்டாவது அவரது உண்மை நிலையை உணர்ந்தாவது இதுபோன்ற வேண்டாத கிசுகிசுக்களை யாரும் எழுதாமல் இருப்பது மிகவும் நல்லது என்று பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version