“யார் கூட வேணாலும் போவேன்..” நான் அவருக்கு ரெண்டாவது தான்..! – கூச்சமே இல்லாமல் கூறிய பிரியா பவானி ஷங்கர்..!

செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar )சமீபத்தில் பேட்டி ஒன்றியம் பேசிய விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இதனைக் கேட்ட ரசிகர்கள் பலரும் உண்மையான விஷயத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறீர்கள் என்று கூறினாலும் கூட இன்னும் சிலர் பிரியா பவானி ஷங்கரை விமர்சிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியா பவானி ஷங்கரிடம் கல்லூரி காலத்தில் நீங்கள் செய்த Thug Life மொமண்ட்ஸ் ஏதேனும் உங்களுக்கு நினைவிருக்கிறதா..? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya BhavaniShankar

ஒருமுறை என்னுடைய காதலன் என்னுடைய ஹாஸ்டலில் இருந்து என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தார். வரும்பொழுது என்ன சொல்லி விட்டு வந்தார் என்று தெரியவில்லை. ஆனால் என்னை அழைத்துக் கொண்டு செல்லும் பொழுது ஹாஸ்டல் செக்யூரிட்டி கண்ணாடியை இறக்குங்கள் என்று கூறினார்.

கண்ணாடியை இறக்கினோம்.. யார் இது..? எங்கே பையனுடன் வெளியே செல்கிறீர்கள்..? என்று செக்யூரிட்டி கேட்டார். அந்த நேரத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

Priya BhavaniShankar

இது, என்னுடைய அவுட்டிங் டைம். நான் யார் கூட வேணாலும் போவேன். என்னோட வார்டன் கிட்ட சொல்லனுமா சொல்லிக்கோங்க.. என்னோட அப்பா அம்மா கிட்ட சொல்லனுமா சொல்லிக்கோங்க.. என்று கூறிவிட்டு வந்தேன்.

என்னை காதலிப்பதற்கு முன்பு நான் இருந்த அதே ஹாஸ்டலில் வேறு ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தார் என்னுடைய காதலர். நான் இப்படி பேசியதை பார்த்துவிட்டு இதற்கு முன்பு வந்த போதெல்லாம் நான் ரகசியமாகத்தான் ஒன்று சென்றேன்.

Priya BhavaniShankar

நீ என்ன இப்படி ஊரைக் கூட்டி கூப்பாடு போடுகிறாய் என்று என்னை பார்த்து வியந்து விட்டார் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் தான் தன்னுடைய காதலருக்கு இரண்டாவது காதலி என்பதையும் பதிய வைத்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

என்னதான் இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை பொது வழியில் பேசி இருக்க வேண்டாம் என்று சில ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

Priya BhavaniShankar

இன்னும் சிலர், ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப அழகா வளர்த்திருக்கமா.? என்று கலாய்க்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். மேலும் உங்களுடைய காதல்களுக்கு நீங்கள் இரண்டாவது காதலி என்பதை ஓபனா சொல்றீங்க.. என்று கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

நடிகை பிரியா பவானி ஷங்கரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த காணொளியை பார்க்க விரும்பினால் இந்த https://www.youtube.com/shorts/G_tNO_u_7vU  லிங்கில் சென்று பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *