“காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது..” நடிகர் சூரியை போல புது ரூட்டில் பிரியா பவானி சங்கர் ..!!

நடிகை பிரியா பவானி சங்கர் அண்மையில் தான் பல கோடி ரூபாய் செலவு செய்து கடற்கரை அருகில் பீச் ஹவுஸ் ஒன்றை வாங்கினார். இதனை அடுத்து இருக்கின்ற பணத்திற்கு என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்து வருவார் போல.

 அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரக்கூடிய வேளையில் இவர் தொடர்ந்து ஏதேனும் ஒன்றை செய்து விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்.

 அந்த வரிசையில் இவர் நடிகர் சூர்யாவை போல ரெஸ்டாரண்டை துவங்க இருப்பதாக அவரே வீடியோ வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 ஆரம்ப காலத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் தான் பிரபலமானார். இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இவர் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார்.

 எவ்வளவுதான் திறமை இருந்தாலும் திரை உலகை பொருத்தவரை அதிர்ஷ்டம் என்பது அவசியம் வேண்டிய ஒன்றாகும். அந்த அதிர்ஷ்டத்தை நிறையவே பெற்றிருக்கக் கூடிய பிரியா பவானி சங்கர் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்ததோடு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 அந்த வரிசையில் இவர் மாயா, கடைக்குட்டி சிங்கம், ஓ மணப்பெண்ணே,  ஹாஸ்டல் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றார். தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கின்ற வளர்ந்து வரும் படி நடிகையான இவர் கடைசியாக தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து இருக்கிறார்.

 மேலும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த யானை படத்தில் சூப்பராக இவரது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனால் இவர் தனது சம்பளத்தையும் அதிகரித்து இருப்பதோடு கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.

 இந்த வரிசையில் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்தியன் 2 வில் கமலஹாசன் உடன், அகிலன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நடித்திருக்கிறார்.

 தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பின்னி பெடலை எடுத்து வரும் இவர் விரைவில்  ரெஸ்டாரன்டை துவங்க இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version