பாலி தீவுகளுக்கு சுற்றுலா.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள பிரியதர்ஷினி.!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அக்கா பிரியதர்ஷினி தனது கணவருடன் பாலி தீவுகளுக்கு சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சமீபத்தில், போட்டோ சூட் எடுக்கும் போது பாறையில் வழுக்கி விழுந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.விஜய் டிவியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தான் நினைவுக்கு வரும் அவருடைய சகோதரி தான் பிரியதர்ஷினி இவரும் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவருடைய முகம் பலருக்கும் பரிச்சயமான முகம் தான். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கை.

அந்த வகையில் வித்தியாசமான போட்டோ ஷூட் எடுக்கிறேன் என்று யாரையும் மீது நின்றுகொண்டு கடல் அருகே உள்ள பாறை மீது நின்றுகொண்டு பரதம் ஆடுவது போன்ற போஸ் கொடுத்து சில புகைப்படங்களை எடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்பொழுது துரதிஷ்டவசமாக மழையின் ஈரம் காரணமாக வழுக்கி விழுந்து உள்ளார் அந்த வீடியோ காட்சிகளில் இணையத்தில் வெளியாகி வைரலானது. பரதம் ஆடுவது போன்ற போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென வந்த கடல் அலை தான் இவர் தடுமாறி கீழே விழுவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்பது இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நமக்கு தெரியவந்தது.

இந்நிலையில், இந்தோனேஷியா பாலி தீவுகளுக்கு சென்றுள்ள பிரியதர்ஷினி அங்கே தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றைவெளியிட்டுள்ளார்.

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …