ஹிந்தி சினிமாவில் நடிகைகளே பணம் குடுத்து இதை பண்றாங்க.. கடைசியா என்னையும்.. பிரியாமணி கதறல்..

பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று நடையாக உயர்ந்தவர். பிரபல நடிகை பிரியாமணி அதன் பிறகு தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மற்ற மொழிகளில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கும் நடிகை பிரியாமணி சமீபத்தில் நடிகைகள் செய்யக்கூடிய பப்ளிசிட்டி ஸ்டன்ட் குறித்து தன்னுடைய பார்வையை பொதுவெளியில் ஓப்பனாக பேசியிருக்கிறார்.

பிரியாமணி

இணைய பக்கங்களில் நடிகைகளை பொதுவெளியில் பார்த்த ரசிகர்கள் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்வது போலவும் ரசிகர்கள் குறிப்பிட்ட நடிகையை துரத்திச் சென்று புகைப்படங்களை எடுப்பது போலவும் பார்த்திருப்பீர்கள்.

அதாவது உடற்பயிற்சி கூடாதிற்கு செல்லும் பொழுது விமான நிலையத்திற்கு வரும் பொழுது அல்லது பொது இடங்களுக்கு வரும்போது என ரசிகர்கள் குறிப்பிட்டு நடிகையை சுத்து போட்டு புகைப்படங்களாக எடுத்து தள்ளுவது போன்ற காட்சிகளை பார்த்திருப்பீர்கள்.

இதையும் படிங்க : மகன் ஆசையாய் கேட்டும் கொடுக்காமல்.. அந்த நடிகருக்கு தூக்கி கொடுத்த சிவாஜி.. சுவாரஸ்ய தகவல்..

இதற்கு ஸ்பாட்டட் என்று தலைப்பு வைத்து இணையத்தில் உலவ விடுவார்கள். இந்த கொடுமையெல்லாம் நடிகைகளே பணம் கொடுத்து செய்கிறார்கள் என்பதுதான் நடிகை பிரியாமணி கூறியுள்ள தகவல்.

இதற்காக தனியாக ஏஜென்சிகள் இருக்கிறது என்றும் நடிகைகள் தாங்கள் தற்போது எங்கே செல்கிறோம் என்று அந்த ஏஜென்சி இடம் சொல்லிவிட்டால் அவர்கள் ஐந்து முதல் பத்து போட்டோகிராபர்களை அந்த இடத்திற்கு அனுப்பி நடிகை சுற்றி சுற்றி போட்டோ எடுக்க வைப்பார்கள்.

உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் பொழுது திருமண நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் கடை திறப்பு விழாக்கள் என எங்கு சென்றாலும் நடிகைகளை இவர்கள் சுற்றி சுற்றி போட்டோ எடுத்து அவர்களிடம் கொடுப்பார்கள்.

லட்சக்கணக்கில் செலவு

இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள் நடிகைகள்.. தற்போது இது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது… அவர்கள் தரும் விலை அதிகம் என்றோ..? குறைவு என்றோ..? நான் சொல்லவில்லை. என்னிடமும் இதுபோல செய்து கொடுக்கிறோம் உங்களுக்கு இந்த சேவை வேண்டுமா.. இவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டனர்.

அப்படியான சேவை எனக்கு தேவையே கிடையாது. பணம் கொடுத்து என்னை பொதுவெளியில் இருப்பது போல புகைப்படம் எடுத்துக் பதிவிட வேண்டும் என்ற எந்த ஒரு தேவையும் எனக்கு கிடையாது.

தமிழ் சினிமாவிலும்

இது ஒரு தேவையில்லாத கலாச்சாரம். பாலிவுட் திரை உலகை தாண்டி இந்த பழக்கம் தற்போது தமிழ் சினிமாவிலும் வந்துவிட்டது. ஆனால், நடிகை பிரியாமணி கூறுவது உண்மையா..? என்று கேட்டால். சுத்தமான உண்மைதான்.

நடிகைகள் எங்கு செல்கிறார்கள்..? எந்த நேரத்தில் அங்கு வருவார்கள்.. என்று குறிப்பிட்ட அந்த புகைப்பட கலைஞர்களுக்கு எப்படி தெரியும்.. உடற்பயிற்சி கூடத்திற்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒருவர் சொல்லலாம்.. விமான நிலையத்திற்கு எந்த நேரத்திற்கு வேண்டுமானாலும்.. ஒருவர் சொல்லலாம்.

இதையும் படிங்க : ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி பானு.. ஹீரோ யாரு தெரியுமா..?

ஆனால் இவர் இந்த நேரத்தில் தான் வருவார் என்று அங்கே கேமராவுடன் காத்திருக்கிறார்கள் கேமராமான்கள். இது எப்படி சாத்தியம்..? குறிப்பாக instagram youtube போன்ற ரீல்ஸ் வீடியோக்களில் வரக்கூடிய வீடியோக்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும்… இது சுத்தமான செட் அப் என்று.

நடிகைகள் தங்களுடைய பிரபலத்திற்காக பணம் கொடுத்து தங்களுடைய புகைப்படங்களை இணையத்தில் உலவ விட செய்கிறார்கள் என்ற விவரம் பிரியாமணி மூலம் வெளிவந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version