ஆரம்ப கால திரைப்படங்களை தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து சினிமாவிற்குள் வந்த நடிகைதான் நடிகை பிரியாமணி. பெரும்பாலும் பலரும் பிரியாமணியின் முதல் படம் பருத்திவீரன் என்றுதான் நினைத்து வருகின்றனர்.
பருத்திவீரன் மூலமாக பெரிதாக அறிமுகமாகி அதன்பிறகு நடிகை பிரியாமணி திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்றார் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நடிகை ப்ரியாமணிக்கு தமிழில் முதன் முதலாக வாய்ப்பு கிடைத்த திரைப்படம் கண்களால் கைது செய்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். அதற்கு பிறகு பிரியாமணி நடித்த திரைப்படம் அது ஒரு கனாக்காலம். இந்த திரைப்படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார்.
பெரும் இயக்குனர்கள் படம்:
இந்த இரண்டு இயக்குனர்களுமே 80,90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்ட பல திரைப்படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் இயக்குனர்கள் ஆவார்கள். அதற்குப் பிறகுதான் அவர் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார்.
அதனால் தான் பிரியாமணிக்கு முத்தழகு என்கிற அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக நடிக்க முடிந்தது என்று கூறலாம். பருத்திவீரன் வெற்றியை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் பிரியாமணி தொடர்ந்து நடித்து வந்தார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன் என்று நிறைய தமிழ் படங்களில் நடித்தது இல்லாமல் தெலுங்கு கன்னடம் என்று மற்ற மொழிகளிலும் நிறைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் பிரியாமணி.
முதல் பட வாய்ப்பு:
சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தார். இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து பிரியாமணி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
முதன் முதலாக பாரதிராஜா திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைக்கிறது என்றவுடன் 16 வயதினிலே சிகப்பு ரோஜாக்கள் மாதிரியான சிறப்பான திரைப்படங்களை எடுத்த இயக்குனர் என்று மட்டும் தான் தெரியும் மற்றபடி நான் பாரதிராஜாவை பார்த்தது கிடையாது.
இந்த நிலையில் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு சென்று எங்கு அமர வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் ஒரு இடத்தை காட்டி அங்கு அமர சொன்னார்கள் நானும் மிகவும் தெனாவட்டாக நடந்து சென்று அந்த இடத்தில் அமர்ந்தேன்.
அப்பொழுது பத்து நிமிடம் கழித்து என்னை பாரதிராஜா அழைத்தார் பாரதிராஜா என்ன பார்த்து ”என்ன தெனாவட்டாக போய் அங்கே அமர்ந்தாய் அதை நான் இங்கிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் எல்லாம் அமைந்திருக்கும் பொழுது இப்படி சென்று அமரும் உனது நடவடிக்கை எனக்கு பிடித்திருக்கிறது எனவே நீதான் எனது படத்தின் கதாநாயகி” என்று கூறிவிட்டார் என்று அந்த நிகழ்வை பதிவு பகிர்ந்து இருக்கிறார் பிரியாமணி.