நீங்க அதுக்கு.. Free-யா..? Money-யா..? விவகாரமான கேள்வி பிரியாமணி கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை பிரியாமணி தமிழில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகையாக இருந்தவர். இப்போது அவர் தமிழில் நிறைய படங்களில் நடிப்பதில்லை என்றாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

பிரியாமணி

பாரதிராஜா இயக்கத்தில் கண்களால் கைது செய் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஆனால் அவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை, வரவேற்பை ரசிகர்களிடம் ஏற்படுத்திய படம் அமீர் இயக்கிய பருத்திவீரன் படம்தான்.

கடந்த 2007ம் ஆண்டில், இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில், சிவக்குமார் மகன் கார்த்தி, கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில், பருத்திவீரனை விரும்பும் காதலியாக பிரியாமணி நடித்திருந்தார்.

முத்தழகு – தேசிய விருது

இந்த படத்தில் சரவணன், சித்தப்பு கேரக்டரிலும் டக்ளஸ் கேரக்டரில் கஞ்சா கருப்பும் நடித்தது, அவர்களது சினிமா பயணத்தில் முக்கியமாக அமைந்தது. இந்த படத்தில் முத்தழகு கேரக்டரில் சிறப்பாக நடித்ததற்காக இந்திய அரசின் தேசிய விருதை பெற்றார் பிரியாமணி.

தொடர்ந்து தோட்டா, ஆறுமுகம், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், அது ஒரு கனாக்காலம், ராவணன், சாருலதா என பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் பிரியாமணி நடித்திருந்தார்.

பிரியாமணியை பொருத்த வரை, நடிப்பை நல்ல முறையில் கேரக்டரை உள்வாங்கி அந்த நடிப்பை அப்படியே தன் இயல்பாக வெளிப்படுத்தக் கூடியவர்.

வக்கீல் கேரக்டரில்

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் நேரு. இதில் கண்பார்வையற்ற ஒரு பெண்ணை, இளைஞன் கெடுத்து விடுகிறான்.

அந்த பெண்ணின் தந்தை சிலை வடிக்கும் கலைஞர். அவரிடம் அந்த வித்தையை அந்த பெண் கற்றுக்கொள்கிறார். சிலைகள் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற அந்த பெண், தன்னை கெடுக்கும் இளைஞனின் முகத்தை தடவிப் பார்த்து, அவனை போலவே சிலை வடிக்கிறாள்.

அதை ஆதாரமாக வைத்து, அந்த இளைஞனை போலீசார் கைது செய்கின்றனர். அந்த வழக்கில், இளைஞனுக்கு சாதகமாக வாதாட புகழ்பெற்ற சீனியர் வக்கீல் ராஜசேகர் என்ற கேரக்டரில் வருகிறார். அவரது மகளாக வக்கீலாக பிரியாமணி நடித்திருந்தார்.

மோகன்லால்

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாதாடும் வக்கீலாக மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு கட்டத்தில் பிரியாமணி, மோகன்லால் இருவரும் வாதாடும் காட்சிகளில் மோகன்லாலுக்கு இணையாக, திறமையான நடிப்பை பிரியாமணி வெளிப்படுத்தி இருப்பார்.

இதையும் படியுங்கள்: கூவத்தூருக்கு திரிஷா வரலையா..? என் மேல் வழக்கு போட சொல்லுங்க.. பிரபலத்தின் வாக்குமூலம்..!

அதே போல் பொய் சாட்சி சொல்லவும், கண்களால் அசைவு செய்து அதற்கேற்ப கூண்டில் நிற்பவரை அவரது கட்சிக்காரருக்கு சாதகமாக பேச வைப்பார். இப்படி பக்குவப்பட்ட, திறன்பட்ட நடிப்பில் ஒரு நல்ல நடிகையாக பிரியாமணி இருந்து வருகிறார்.

தொகுப்பாளர் கேள்வி

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரியாமணியிடம் தொகுப்பாளர் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கவா..? என்று கேட்கிறார். அதற்கு பிரியாமணியும் தாராளமாக கேளுங்கள் என்று கூறுகிறார்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

உடனே தொகுப்பாளர் நீங்கள் Free-யா..? Money-யா..? நடிப்பதற்கு என்று கேட்கிறார்.. இதனை கேட்டு செல்லமாக கடுப்பான நடிகை பிரியாமணி கேள்வியை கேளுங்கள் என்று நான் சொன்னதற்கு என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும் என்று சிரித்தபடி பதில் கொடுத்து இருக்கிறார்.

இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விவகாரமான…

அதாவது பிரியா மணி என்ற அவரது பெயரையே பிரித்து ப்ரீயா, மணியா என்று கலாய்ப்பது போல, அந்த தொகுப்பாளர் கேட்டதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.

நீங்க அதுக்கு.. Free-யா..? Money-யா..? என அவரது பெயரை வைத்தே விவகாரமான கேள்வியை கேட்ட அவருக்கு பிரியாமணி கொடுத்த பதில் வைரலாகி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version