உடம்பில் இது இல்லாம நடிக்கணும்.. பிரியாமணி விபரீத ஆசை..!

2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தது வெகுவாக வரவேற்பு பெற்றது.

மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளரும் ஒரு கதாநாயகியாக மாறினார் பிரியாமணி. சொல்ல போனால் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பு பெற்ற படம் பருத்திவீரன்தான்.

பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு கதாபாத்திரமாக நடிக்கும் பொழுது பிரியாமணிக்கு தமிழே பேசத் தெரியாது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த ஒரு கதாபாத்திரம் அமீரின் இயக்கத்தின் காரணமாக அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

தமிழ் படத்தில் கஷ்டம்:

இருந்தாலும் கூட படத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக பிரியாமணியே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மலைக்கோட்டை மாதிரியான நிறைய திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் வெகு சீக்கிரமாகவே திரைத்துறையில் வரவேற்பை பெறத் தொடங்கினார் பிரியாமணி. கருப்பு நிறத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளின் பிரியாமணி முக்கியமானவர்.

அதேபோல ஆரம்ப கட்டத்தில் அவர் நடித்த திரைப்படங்களில் பெரிதாக மேக்கப் எதுவும் இல்லாமல் தன்னுடைய இயற்கை நிறத்திலேயே நடித்திருப்பார் பிரியாமணி. அதேபோல சினிமாவிற்கு வந்த பிறகு நிறத்தை மாற்றுகிறேன் என்று அவர் மெனக்கெடவும் இல்லை.

பாலிவுட்டில் வாய்ப்பு:

இப்பொழுது வரை தன்னுடைய நிஜ நிறத்தையே பின்பற்றி வருகிறார் பிரியாமணி. சமீபத்தில் ஜவான் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்க இருக்கின்றன.

இதற்கு நடுவே ஃபேமிலி மேன் மாதிரியான டிவி சீரியஸ்களிலும் பிரியாமணி நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய பிரியாமணி கூறும் பொழுது முதன் முதலில் நான் படம் நடிக்கும் போது என்னுடைய முதல் படத்திற்கான சம்பளம் 500 ரூபாய்தான்.

இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் ஆரம்ப கட்டத்தில் எல்லா கலைஞர்களுக்கும் அவ்வளவுதான் சம்பளம் கிடைக்கிறது. அந்த 500 ரூபாயை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். இப்போது வரை அது என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

அதேபோல மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை இப்போது கோடிக்கணக்கில் நான் சம்பளம் வாங்கினால் கூட முதன் முதலில் மாடல் துறையில் மிகக் குறைந்த அளவிலேயே சம்பளம் வாங்கினேன் என்று கூறியிருக்கிறார் பிரியாமணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version