கல்யாணம் பற்றி முதன் முறையாக பேசிய பிரியங்கா..! கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்..!

பிரபல தொகுப்பாளனி பிரியங்கா தேஷ்பாண்டே குறித்து புதிதாக எதுவும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அந்த நிகழ்ச்சி ஹிட் அடித்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக தொடர்ந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய திருமணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, என் வாழ்க்கையில் ஒரு முறை தவறான முடிவு எடுத்த காரணத்தினால் இன்று வரை அதனால் நான் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறேன்.

என்னை சுற்றி இருப்பவர்கள் சங்கடப்படுகிறார்கள். என் குடும்பத்தினர் வேதனையில் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகால மோசமான வாழ்க்கையில் எனக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் அது என்னுடைய தம்பிக்கு பிறந்த குழந்தைதான்.

அவள் என்னுடைய குழந்தை. அவளுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என தழுதழுத்தக் குரலில் பேசிய பிரியங்கா தேஷ்பாண்டேவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளியாக அமர்ந்திருந்த நடிகை அர்ச்சனா இன்னொரு கேள்வியை எழுப்பினார்.

இரண்டாவது திருமணம் குறித்து உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பிரியங்கா தேஷ்பாண்டே நான் அன்புக்காக ஏங்குகிறேன்.. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் உண்மையான காதலை எனக்கு ஒருவரால் கொடுக்க முடியும் என்றால்.. காலம் முழுதும் நானும் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் அவர்கள் கொடுத்த காதலை விட பல மடங்கு காதலை நான் அவர்களுக்கு கொடுப்பேன் என பேசி இருக்கிறார்.

நிகழ்ச்சிகளில் கலகலவென பேசும் பிரியங்கா தேஷ்பாண்டேவின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள இப்படியான சங்கடங்களை அறிந்த ரசிகர்கள் பிரியங்கா தேஷ்பாண்டே மீது உள்ள மதிப்பு அதிகரிப்பு அதிகரித்திருப்பதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version