விழா மேடையில் மோசமான கெட்ட வார்த்தை பேசிய பிரியங்கா.. தீயாய் பரவும் காட்சிகள்..

சில நேரங்களில் மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பவர்கள், அல்லது மற்றவர்களால் அப்படி கருதப்படுபவர்கள், தங்களை மிகப்பெரிய முட்டாள்களாக காட்டிக் கொள்வர். இது அவர்கள் அறிந்தும் நடக்கும். சில நேரங்களில் அறியாமலும் நடக்கும்.

பிரியங்கா

விஜய் டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களை, தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. துவக்கத்தில் அவரது பேச்சும், நடவடிக்கையும் மிகப்பெரிய புத்திசாலி பெண் போல மக்கள் மத்தியில் காட்டிக்கொண்டு இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் அவர் செய்யும் ரியாக்‌ஷன்களும், அவர் பேசும் வார்த்தைகளும், சக தொகுப்பாளர் மா கா பாவுடன் அவர் செய்யும் லூட்டிகளும் பார்வையாளர்களில் பலருக்கு, எரிச்சலை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன் அவர், விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

அப்போது அவர் ஒரு செலிபரட்டி என்பதை மறந்து நடந்துக்கொண்ட விதமும், சாப்பிடும் விஷயங்களுக்காக அவர் செய்த அலப்பறைகளும் பார்த்த பலருக்கு, ச்சே என்ன பெண் இவர், இப்படி பலரது முன்னிலையில் இப்படி தரம் கெட்ட முறையில் நடந்துக் கொள்கிறாரே என கடுமையாகவே விமர்சித்தனர்.

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரியங்கா. யாரோ ஒருவர் சொன்ன விஷயமாகவே இருந்தாலும், அதை பல பேர் முன்னிலையில், அவரே இப்படி வெளிப்படையாக சொல்லலாமா என பலரும் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

தன்னை தரக்குறைவாக திட்டியதாக

சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இவரும், அர்ச்சனாவும் பங்கேற்றனர். அப்போது அர்ச்சனா, பிரியங்காவிடம் சில விஷயங்கள் குறித்து பேசினார். அவ்வப்போது சில கேள்விகளையும் பிரியங்காவிடம் கேட்டார்.

அப்போது, அவரது கேள்விகளுக்கு பதிலளித்த பிரியங்கா, ரசிகர் ஒருவர் தன்னை தரக்குறைவாக திட்டியதாக கூறி ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்தார்.

இதையும் படியுங்கள்: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கச்சி யாருன்னு தெரியுமா..? இதோ புகைப்படம்..

அப்போது பிரியங்கா கூறுகையில், மிகப்பெரிய தலைவர் ஒருவர் இறந்திருந்தார். அப்போது என்னுடைய யூடியூப் சேனலில் நான் வீடியோ ஒன்று போட்டிருந்தேன்.

அப்போது எனது வீடியோவுக்கு கீழே ஒருவர், எவ்வளவு பெரிய தலைவர் இறந்திருக்கிறார். பு… வீடியோ போட்டிருக்கா பாரு, என்று என்னை அசிங்கமாக திட்டியிருந்தார்.

கெட்டவார்த்தையை

இதைப்பார்த்த இன்னொரு ரசிகர், பிரியங்காவுக்கு ஆதரவாக கமெண்ட் போட்டிருக்கிறார். அவர், ஏண்டா இவ்வளவு பெரிய தலைவர் இறந்திருக்கிறார். பு… என்று நீ கமெண்ட் போடுகிறாயா, என கேட்டிருந்தார் என்று அந்த கெட்ட வார்த்தையை அப்படியே பகிரங்கமாக சொல்லி இருக்கிறார் பிரியங்கா.

இதையும் படியுங்கள்: விருது விழாவில் மோசமான கவர்ச்சி உடையில்.. கதி கலங்க வைத்த நடிகை ஜான்வி கபூர்..!

தன்னை பற்றி மோசமாக பேசி ஆனந்தம் கொள்பவர்கள் மத்தியில், தனக்காக பேசும் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக இந்த விஷயத்தை அங்கு பகிர்ந்துள்ளார் தொகுப்பாளர் பிரியங்கா.

கண்டனம்

நடந்த விஷயம் எதுவாக இருந்தாலும், அதற்காக விழா மேடையில் மோசமான கெட்ட வார்த்தையை பிரியங்கா பேசலாமா என பலரும், அதற்கு கண்டனம் தெரிவித்து பிரியங்காவை திட்டி வருகின்றனர். அவர் கெட்ட வார்த்தை பேசிய காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version