நெட்டிசன் போட்ட ஒற்றை பதிவு.. அடுத்த நொடியே கண் கலங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே..!

சின்னத்திரையில் கலக்கி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே சுட்டி டிவி முதல் சன் நெட்வொர்க்கில் பல சேனல்களில் பணியாற்றிய இவர் சினிமா காரம் காபி எனும் ஷோ மூலம் விஜய் டிவியில் களம் இறங்கினார்.

இதனை அடுத்து இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார் மியூசிக் போன்றவை ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி தந்ததோடு பிக் பாஸ் சீசன் ஐந்தில் பங்கேற்கவும் வைத்தது.

பிரியங்கா தேஷ்பாண்டே..

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய பெண்ணே இசை அண்ட் பிளாஸ்க் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்கலில் தன்னுடைய அபார திறமையை வெளிப்படுத்திய இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தொலைக்காட்சிகளில் விஜேவாக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் இவர் விஜேவாக பணியாற்றிய பணியை சமீபத்தில் ஒரு ரசிகர் பாராட்டி போட்ட ஒற்றை பதிவால் கண் கலங்கி என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேவின் நிலை பற்றி வார்த்தையால் சொல்ல முடியாது.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பாவனா பாலகிருஷ்ணன் விஜய் டிவியை விட்டு விட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழுக்கு தாவியதை அடுத்து அந்த நிகழ்ச்சியில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய பிரியங்கா தனக்காக அதிக அளவு ஃபேன்களை பெற்றிருக்கிறார்.

நெட்டிசன் போட்ட ஒற்றை பதிவு..

பிரியங்கா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசனில் கெஸ்ட் ஆக சென்று சீசன் 5 போட்டியாளராக களம் இறங்கி அனைவரையும் கவந்தார்.

பிக் பாஸ் சீசன் 5 வெற்றி பெற முடியாத இவர் ரன்னரப்பாக மாறினார். 15 ஆண்டுகளுக்கு மேல் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருக்கும் இவர் ஆரம்பத்தில் எப்படி ரசிகர்களை குஷிப்படுத்தினாரோ அது போலவே தொடர்ந்து பணியாற்றி வருவது இவருடைய பலம்.

கண் கலங்கிய பிரியங்கா..

இதனை அடுத்து இவரது 15 ஆண்டு கால தொகுப்பாளினி பணியை பாராட்டி ஜெனி எனும் ரசிகை போன்ற ட்விட்டை பார்த்து கண் கலக்கி போய் இருக்கும் பிரியங்கா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்.

மேலும் அந்த தீவிர ரசிகையின் போஸ்டை பார்த்து இவருக்கு பதில் சொல்ல வார்த்தைகளை வரவில்லை. எப்போதும் எனக்காக நீங்க இருக்கனும்.

இதனை பார்த்த உடனே இன்னும் எக்ஸ்ட்ரா ஹேப்பியோடு ரசிகர்களை தொடர்ந்து என்டர்டைன் பண்ணனும் நினைக்கிறேன் என பிரியங்கா நன்றி தெரிவித்திருக்கிறார்

பிரியங்காவின் இந்த பணி சூப்பர் சிங்கர் ஆரம்பித்து தற்போது நிறைவடைந்த சூப்பர் சிங்கர் 10 சீசன் வரை இவரை தொகுத்து வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவ ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் பலரும் பிரியங்கா என்னும் பல ஆண்டுகள் இது போன்ற சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam