தன்னுடைய 2வது திருமணம் மற்றும் குழந்தை குறித்து பிரியங்கா தேஷ்பாண்டே எமோஷனல் பேச்சு…!

விஜய் தொலைக்காட்சியில் டிடிக்கு அடுத்தபடியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் விஜே பிரியங்கா.

இவரின் கலகலப்பான பேச்சு தூய்மையான எண்ணங்கள், குழந்தை போன்ற சுபாவங்கள், நகைச்சுவை பேச்சு, குபீர் சிரிப்பு, பாடும் திறமை உள்ளிட்டவை மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

இன்று விஜய் தொலைக்காட்சியாலே தவிர்க்க முடியாத ஆங்கராக அங்கு தனக்கான இடத்தை ஆக்ரமித்து வைத்திருக்கிறார் பிரியங்கா.

இதையும் படியுங்கள்: Varalakshmi கணவரின் முதல் மனைவி Kavita யார் தெரியுமா..? அடக்கொடுமைய.. என்னப்பா சொல்ட்றீங்க..

குறிப்பாக தனது நண்பன் மாகாபா உடன் சேர்ந்து அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ்.

பிரியங்கா தன்னுடன் வேலை பார்த்து வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் சில ஆண்டுகளிலேயே அவரை விட்டு பிரிந்து விட்டார்.

ஆனால் இதுவரை தனது விவாகரத்து பற்றி அவர் இஎங்குமே வெளிப்படையாக ன்னும் அறிவிக்கவில்லை. பொது இடங்களில் சில காலமாக கணவர் குறித்து எந்த வார்த்தைகளையும் பேசாமல் இருக்கிறார்.

இதனிடையே பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற போது பிரியங்கா அதிகம் நெகடிவ் ட்ரோல்களை தான் பெற்றார். இருப்பினும் மீண்டும் தொகுப்பாளராக வந்து அவர் கலக்கினார்.

இதையும் படியுங்கள்: வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போச்சு.. டிடிக்கு என்ன ஆச்சு.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா தன்னுடைய அம்மாவுடன் கலந்துக்கொண்டபோது என் மகளின் திருமண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என வேதனையுடன் பேசியிருக்கிறார்.

இது குறித்து முதன்முறையாக வெளிப்படையாக பேசிய பிரியங்கா, தன்னுடைய கணவருடன் வாழ்ந்த நாட்கள் எனக்கு சந்தோஷமாகவே இல்லை. இதனால் நான் வரை விட்டு பிரிந்துவந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

என்னுடைய திருமண விஷயத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டேன். மேலும் இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் நடக்கப்போகும் பெரிய விஷயங்களால் என்னுடைய அம்மாவை எந்த விதத்திலும் வருத்தமடைய செய்யவே மாட்டேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியில் தன் மனதிற்கு பிடித்த ஒவ்வொரு விஷயத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறேன். பிக்பாஸுக்கு செல்வது, மாடி வீடு கட்டுவது, சொகுசு கார் வாங்குவது எல்லாம்.

இதையும் படியுங்கள்: சாக்லேட் காஃபி.. கன்னாபின்னா கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

எனக்கும் வயசு ஆகிட்டே போகுது. எனக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை உள்ளது. என்னை யாராவது பயங்கரமா லவ் பண்ணனும். தாங்கு தாங்குன்னு தாங்கணும்.

அதுபோன்ற நபருடன் வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும். மேலும் என்னுடைய தம்பி மகள் தான் என்னுடைய முழு சந்தோஷம். அவள் தான் என்னை மிகுந்த மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார் என மிகவும் எமோஷ்னலாக பேசியிருக்கிறார் பிரியங்கா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version