பிரியங்கா : விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு கலக்கப்போவது யாரு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிய பிரியங்கா தேஷ்பாண்டே பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர்.
ஆனாலும் கூட படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். ஆங்கிலம் கன்னடம் ஹிந்தி என பல மொழிகளை பேசும் திறமை உடைய இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளனியாக பணியாற்றினார்.
அதன் பிறகு சன் டிவியில் பணியாற்றிய இவர் இறுதியாக விஜய் டிவியில் தொகுப்பாளனியாக சேர்ந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 100 நாட்கள் தாக்கு பிடித்து விளையாடினார். வாயாடி என்று ரசிகர்கள் மத்தியில் செல்லமாக பெயர் எடுத்திருக்கும் இவர் தன்னுடைய காதலர் பிரவீன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தொலைக்காட்சிகளில் மட்டும் கலகலப்பாக இருக்கக்கூடியவர் பிரியங்கா தேஷ்பாண்டே என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இவர் நிஜ வாழ்க்கையிலும் கலகலப்பானவர் தான் என்பதற்கு பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில், சமீபத்தில் விமான பயணத்தின் போது சக தொகுப்பாளரும் நடிகருமான மாகாபா ஆனந்த் வாயை பிளந்தபடி நன்கு உறங்கிக் கொண்டிருக்க அவருடைய வாயில் ஒரு கடலையை போட்டுவிட்டு இப்படித்தான் கடலை போட வேண்டும் என்று கேப்ஷன் வைத்து ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.