கணவரை பிரிந்துவிட்டேன்.. ஆனால் அதுக்காக ஏங்குறேன்.. பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன் டாக்..!

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் பிரியங்கா தேஷ் பாண்டே. டிவி சேனல் தொகுப்பாளர்களில் அதிக முக்கியத்துவம் பெற்ற, அதிக சம்பளம் பெறக்கூடியவராக இருக்கிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே

சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், தி வால், ஸ்டார் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், இசை போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால், மக்கள் மத்தியில் பிரியங்கா தேஷ்பாண்டே மிக பிரபலமானார்.

சில குறும்படங்களிலும் பிரியங்கா நடித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துக்கொண்ட பிரியங்கா தேஷ்பாண்டே இதில் 2ம் இடத்தை பிடித்து ரன்னராக வெற்றி பெற்றார்.

பிரியங்கா தேஷ்பாண்டே கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும், சென்னைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த நிலையில், சென்னையிலேயே படித்தார். வளர்ந்தார் என்பதால் இவரை சென்னை பொண்ணு என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர்.

காதலருடன் திருமணம்

எத்திராஜ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த பிரியங்கா, தனது நீண்டகால காதலரான பிரவீண்குமாரை கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். ஆறு ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், தனது கணவரை பிரிந்து விவாகரத்து செய்துவிட்டார் பிரியங்கா.

இதையும் படியுங்கள்: நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு.. கிக் ஏற்றும் மாளவிகா மோகனன்..

தொகுப்பாளராக விஜய் டிவியில், மாகாபாவுடன் பயங்கர காமெடி செய்து பிரியங்கா தேஷ்பாண்டே செய்யும் சேட்டைகளும், குறும்புகளும் ஒரு கட்டத்தில் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தாலும் சில நேரங்களில் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் விதமாகவும் அவர் நடந்துக்கொள்வது அடிக்கடி நடந்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டிலும்

குறிப்பாக பிக்பாஸ் வீட்டிலும், சாப்பிடுகிற விஷயத்தில் பிரியங்கா காட்டிய ஆர்வமும், டாஸ்க்குகளில் கூட சாப்பிடுகிற விஷயத்துக்காக மிக இழிவாக நடந்துக்கொண்டதும் பயங்கர அதிருப்தியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

அன்புக்காக ஏங்குகிறேன்

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரியங்கா, உண்மையான அன்புக்காக ஏங்குகிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அந்த நேர்காணலில் அவர், நான் செய்யும் வேலையை மிகவும் நேசிக்கிறேன். ஏனென்றால் அது எப்போதும் என்னை ஏமாற்றியது இல்லை. இந்த தொழிலின் மூலமாக எனக்கு நிறைய மக்களின் அன்பு கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: உடை மாற்றும் அறையில்..அது தெரிய.. டாப் ஆங்கிளில் டிக் டிக் டிக் பட நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ் ஹாட் செல்ஃபி..

நான் உண்மையான அன்புக்காக இப்போதும் ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். அப்படி ஒரு அன்பு கிடைத்தால் மட்டும் போதும். மற்ற எல்லாவற்றையும் விட அந்த அன்புக்கே என்னை நான் திருப்பி தருவேன் என்று அந்த நேர்காணலில் பிரியங்கா தேஷ் பாண்டே கூறியிருக்கிறார்.

மகாபா உடன் கொண்டாட்டம்

கணவரை பிரிந்துவிட்டேன்.. ஆனால் உண்மையான அன்புக்காக ஏங்குறேன்.. என்று பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன் டாக் விட்டுள்ளார். ஆனால், அந்த ஏக்கம், கவலை எல்லாம் மாகாபா உடன் சேர்ந்து கொண்டாட்டம் போடும் போதே இல்லையே, என நெட்டிசன்கள் பங்கம் செய்து கலாய்த்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version