பிரியங்கா மோகனை தொடர்ந்து தனுஷ்-ன் ப்ராக்கெட்டில் சிக்கிய இளம் நடிகை..!

 ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் தனுஷ் சில மாதங்களுக்கு முன் தான் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறியிருந்தார்.

 இன்று தனது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வந்த நிலையில் தனுஷ் ஜகமே தந்திரம்,மாறன் போன்ற படங்கள் தோல்வியை தழுவியது.

திருமணத்துக்குப் பிறகு சக்கைப்போடு போட்ட திரைப்படங்கள் அவர் விவாகரத்து செய்த பின் எந்த படமும் சரியான வழியில் ஓடாததால் இவர் ராசியில்லாத நடிகர் தனுஷுக்கு எதிர்காலம் இல்லை என்று பலவிதமாக சினிமாத்துறையில் இருந்தவர்கள் பேசி வந்தார்கள்.

 இதனையடுத்து தன் இவற்றில் வெளிவந்த திருச்சிற்றம்பலம்  இவருக்கு ஒரு மாபெரும் வெற்றியை தந்தது என்று கூறலாம் இதைத்தொடர்ந்து இவரது அண்ணனுடன்  இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படமும் சமீபத்தில் வெளியாகி  ரசிகர்களின் ஆதரவோடு சக்கைபோடு போட்டு வருகிறது.

இதையடுத்து ரஜினி வீட்டில் சமரசம் நடந்ததாக தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் மீண்டும் கணவன் மனைவியாக இணைவார்களா? தன் பிள்ளைகளின் நலன் கருதி இதை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இருவரும் தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருவதால் நாம் இதற்கான பதிலை இப்போது எதிர்பார்ப்பது சற்று சிரமமே.

இதையடுத்து தனுஷின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

மேலும் ஏற்கனவே இவர் தன் படத்தில் டாக்டர் படம் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகனை தன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் பண்ணியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் ராஷ்மிகா மந்தனா வருகிறார்கள். எனவே ரசிகர்கள் அனைவரும் இந்த நடிகையும் இவர் விட்டு வைக்கவில்லை என்ற கிண்டல் செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam