கர்நாடகா பூர்வீகமாக இருந்தாலும் பிரியங்கா மோகன், பிறந்தது சென்னையில்தான். 1994ம் ஆண்டில் பிறந்திருக்கிறார். எஸ்ஆர்எம் கல்லூரியில் டிகிரி முடித்த பிரியங்கா மோகன், காலேஜில் படிக்கும்போதே மாடலிங் செய்திருக்கிறார்.
பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன் பார்ப்பதற்கு மிகவும் ஹோம்லியாக இருக்கிறார். அதே வேளையில் க்யூட் ஆகவும் தெரிகிறார் என்பதால் அவரது பிரண்ட்ஸ் சிலர், பிரியங்கா மோகனை, மாடலிங் செய்யுமாறு ஐடியா கொடுத்துள்ளனர்.
மாடலிங் செய்துக்கொண்டிந்த காலகட்டத்தில்தான், 2019ம் ஆண்டில் கன்னட படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது.
தனக்கு நடிக்க வருமா, என மனதுக்குள் தயக்கம் இருந்தாலும், டைரக்டர் தந்த ஊக்கமும், தைரியமும்தான் பிரியங்கா மோகனை கேமரா முன் நிற்க வைத்தது.
இருந்தாலும் எல்லா படங்களிலும் இப்படி இயக்குநர்கள் தனக்கு ஆதரவாக, ஒத்துழைப்பாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்துக்கொண்ட பிரியங்கா மோகன், பெங்களூருவில் இருந்த ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் சேர்ந்து நடிப்பு கற்கிறார்.
நடிப்பு கலை
அதன்பிறகு படிப்படியாக அவர் நடிப்புக் கலையை கற்றுக்கொண்டு ஒரு நடிகையாக தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டார். அடுத்து அவருக்கு தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வர, அந்த படத்தில் நடித்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதன்பிறகு, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒரு வாய்ப்பு தேடி வருகிறது. அத்துடன் டான் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடிக்க அவர் கமிட் செய்யப்படுகிறார்.
அதன்பிறகு எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.
தற்போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆன கேப்டன் மில்லர் படத்தில், தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். துப்பாக்கியில் சுடும் ஆக்சன் காட்சிகளிலும் தன் திறமையை காட்டியிருந்தார்.
அலட்டல் இல்லாத அழகு
தமிழ் பொண்ணு, வசனங்கள் பேசுகிற விதம், இயல்பான முகபாவனை, அலட்டல் இல்லாத அழகு என ரசிகர்கள் பிரியங்கா மோகனை கொண்டாடி வருகின்றனர்.
ஆரம்பத்தில், நடிப்பு பயிற்சி பெற்ற நிலையில் இப்படித்தான் பிரியங்கா மோகனுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என்பது ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை தந்திருக்கிறது.