சிவகார்த்திகேயன் இந்த விஷயத்துல வீக்.. ரகசியத்தை உடைத்த பிரியங்கா மோகன்..! ரசிகர்கள் ஷாக்..!

சாதாரண தொகுப்பாளராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு ரோல் மாடலாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார் என்று கூறலாம்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நபர்கள் கூட சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பொழுது சிவகார்த்திகேயனின் நகைச்சுவைக்காகவே அந்த நிகழ்ச்சிகள் பிரபலமாக துவங்கின.

சிவகார்த்திகேயன்

அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார் சிவகார்த்திகேயன். அதனால்தான் அவர் சினிமாவிற்கு நடிக்க சென்றபோது எளிதாகவே பிரபலமாகிவிட்டார். அவரது முதல் திரைப்படத்தையே அதிகமான மக்கள் பார்ப்பதற்கு ஆவல் காட்டியதற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த வரவேற்பு தான் காரணமாக இருந்தது.

ஆரம்பத்தில் காமெடி நடிகனாக தனது பயணத்தை துவங்கிய சிவகார்த்திகேயன் போக போக ஆக்ஷன் பக்கம் திரும்பினார். கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்களில் ஆக்ஷனை கலக்க துவங்கினார். காக்கிச்சட்டை, ரெமோ மாதிரியான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தாலும்  ஒன்றிரண்டு சண்டை காட்சிகளை படங்களில் வைத்தார்.

ரகசியத்தை உடைத்த பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயன் பிறகு போக போக ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறினார் தற்சமயம் அமரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஷான ஒரு கதாபாத்திரத்தை கொண்ட படமாகும்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சிரிக்கவே மாட்டார் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா மோகன்.

தமிழில் அதிக வரவேற்பு பெற்றார். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்சமயம் சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனின் வீக்னஸ் என்ன என்று கூறியிருந்தார்.

ரசிகர்கள் ஷாக்.

அதில் பிரியங்கா மோகன் கூறும் பொழுது சிவகார்த்திகேயனுக்கு இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவர் அதற்கு அடிமையாகி விட்டதாகவும் கூறுகிறார் பிரியங்கா மோகன். படப்பிடிப்பு என வரும் பொழுது எப்பொழுதும் ஏதாவது ஒரு இனிப்பை வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்.

மேலும் கூட இருக்கும் நடிகர் நடிகைகளுக்கும் இனிப்புகளை சாப்பிட சொல்லி வற்புறுத்துவார் சிவகார்த்திகேயன். என்னையும் கூட பலமுறை இனிப்புகளை சாப்பிட சொல்லி சிவகார்த்திகேயன் வற்புறுத்தி இருக்கிறார் என்று கூறுகிறார் பிரியங்கா மோகன்.

சிவகார்த்திகேயனும் சில பேட்டிகளில் தனக்கு இனிப்பு பிடிக்கும் என்று கூறி இருக்கிறார் பொதுவாக நடிகர்கள் தங்களது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதற்கு இனிப்புகளை தவிர்த்து வருவது வழக்கம் சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அதெல்லாம் கவலைப்படாமல் இனிப்புகளை சாப்பிட்டு வருகிறார் என்பது ஆச்சரியமான ஒரு விஷயமாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version