இரண்டு விவாகரத்து செய்த நடிகர் மீது காதல்.. ஓப்பனாக பேசிய பிரியங்கா மோகன்..!

சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

நடிகை பிரியங்கா மோகன்:

அறிமுகமான புதிதில் இருந்தே தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலமாக தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார்.

முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளிவந்த ஒந்த் கதே ஹெல்லா மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன் .

ஆனால், அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுக்கவில்லை. அதை எடுத்து தெலுங்கில் நானியின் கேங் லீடர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் .

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரியங்கா மோகன் மிகப்பெரிய அடையாளத்துடன் பார்க்கப்பட்டு வந்தார்.

அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள்:

தொடர்ச்சியாக அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க ஸ்ரீகரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் அவருக்கு அழைப்பு விடுக்க சிவகார்த்திகேயன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் பிரியங்கா மோகன் .

இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பும் காமெடி ரொமான்ஸ் இது எல்லாமே மக்களுக்கு மிகவும் பிடித்து போக பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதை அடுத்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் கவனம் பிரியங்கா மோகன் மோகன் பக்கமே சென்றது. சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதிர்க்கும் துணிந்தவன் திரைப்படத்தில் அவரின் கதாநாயகிகளாக நடித்திருந்தார் .

சூர்யாவுடன் ஜோடி போட்ட பிரியங்கா:

தமிழில் நடித்த இரண்டாவது திரைப்படமே முன்னணி நடிகரான சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததால் அவர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் .

தொடர்ச்சியாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்ததோடு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடிக்க அதிக கவனத்தை செலுத்தி வரும் பிரியங்கா மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை குறித்து வெளிப்படையாக பகிர்ந்து பேசி இருக்கிறார்.

அதாவது , நான் இன்ஜினியர் படிப்பை முடித்து இருக்கிறேன் நான் சினிமாவில் ஒரு வேலை வரவில்லை என்றால் ஏதேனும் கம்பெனியில் ஒரு நல்ல பணியில் இந்நேரம் வேலை செய்து கொண்டிருப்பேன்.

நான் பிரபலமான ஐடி கம்பெனியில் நல்ல வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு கனவோடு இருந்தேன். பின்னர் நடிப்பில் வாய்ப்பு கிடைத்தால் இந்த பக்கம் வந்துவிட்டேன்.

விவாகரத்து ஆன நடிகர் மீது ஈர்ப்பு;

எனக்கு ரஜினிகாந்த் சார் என்றால் ரொம்பவும் பிடிக்கும் அவரது சிம்ப்ளிசிட்டி மற்றும் அவரது எதார்த்தமான நடிப்பு உள்ளிட்டவை வெகுவாக என்னை சிறு வயதில் இருந்தே கவர்ந்தது.

எப்போதாவது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என காத்திருக்கிறேன் என்றார். மேலும் சிறு வயதிலிருந்தே பிரபல ஹாலிவுட் நடிகரான பிராட் பிட் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அவர் மீது பயங்கர க்ரஷ் என வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். நடிகர் பிராட் பிட் இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுக்கு வேறு யாரும் கிடைக்கலையா? இரண்டு முறை விவாகரத்தான நடிகருடன் தான் க்ரஷ் வருமா? என கிசுகிசுக்கள் எழுதியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version