“அந்த உறுப்பு கட் ஆகிடுச்சு.. அதுக்காக..” கணவரை பிரிந்தது குறித்து பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ…

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சின்னத்திரைகளில் வலம் வந்த மிகச்சிறந்த நடிகை பிரியங்கா நல்காரி. இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: படிக்காதவன் படத்தில் சிறு வயசு ரஜினியாக நடித்த சிறுவன் இந்த நடிகையின் கணவனா..? வைரல் போட்டோஸ்..

அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு சந்திர சித்தார்த்தா இயக்கிய அந்தரி பந்து வாயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பிரியங்கா நல்காரி..

மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்த இவர் 2018 ஆம் ஆண்டு தமிழில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்த ரோஜா என்ற சீரியல் மூலம் தமிழக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டு மிகவும் பிரபலமான நபராக மாறினார்.

இந்த தொடரில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவரை சாரும். ஏனெனில் ரோஜா ஒளிபரப்பு ஆகிறது என்றால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் இத்தொடரை பார்க்க டிவியின் முன் அமர்ந்து விடுவார்கள்.

மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த காஞ்சனா 3 படத்தில் நடித்திருக்கிறார். இவர் 2023-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி மலேசியாவில் இருக்கும் பத்து மலை முருகன் கோவிலில் தனது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் ராகுல் வர்மா என்ற தொழில் அதிபரை நீண்ட காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து சீரியல்களை மட்டும் தலை காட்டி வந்த இவர் அடிக்கடி Instagram பக்கத்தில் தன் கணவரோடு இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிடுவதில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை அவ்வப்போது நிரூபித்தார்.

அத்தோடு தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். மேலும் சீதா ராமன் என்ற தொடரிலும் நடித்திருக்கிறார்.

அந்த உறுப்பு கட்டாயிடுச்சா..

இந்நிலையில் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நல்காரி தனது கணவரை விட்டு பிரிந்து இருக்கிறார். இந்த பிரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை இது வரை தெரிவிக்காத அவர் தன்னுடைய கணவர் வீட்டில் அவரை ஏற்றுக் கொள்ளாதது தான் பிரிவுக்கு காரணம் என்ற கிசுகிசுக்கள் ஏற்பட வழி செய்து விட்டார்.

இதனை அடுத்து இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் எவ்வளவு நாசுக்காக ஒரு விஷயத்தை தெளிவாக கூறியிருக்கிறார் என்பதை பற்றி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ..

இந்த வீடியோவில் அவர் சொன்ன கதை என்னவென்றால் 10 விரலில் ஒரு விரல் கட் ஆகிப்போன ஒருவர் அதற்காக வாழ்க்கை முடிந்து விட்டது என கருதுவது தவறு. மீதி ஒன்பது விரல்கள் இருப்பது போல பல வருடங்கள் வர இருக்கிறது. எனவே அடுத்து என்ன என்று பார்த்து வாழ்க்கையில் நகர வேண்டும் என்ற தத்துவத்துடன் தான் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் பிரியங்கா நல்காரி.

இதையும் படிங்க: கணவர் அடித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே.. வயிற்றை தள்ளிகிட்டு கொடுத்த பதிலடி..

இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் தன்னுடைய கணவர் பிரிந்தது பற்றி பிரியங்கா நல்காரி இப்படி மறைமுகமாக கூறியிருக்கிறார் என்ற கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வண்ணம் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் போனதை பற்றி எப்போதும் யோசிக்க கூடாது. போனது, போனது தான். அதைப்பற்றி நினைப்பதால் எந்த பயனும் இல்லை. அடுத்தது என்னவென்று தான் யோசிக்க வேண்டும். எனவே பிரசன்ட் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதை நீங்கள் என்ஜாய் பண்ணுங்க என்று அவர் கூறியிருக்கும் விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவை பார்க்க விரும்பினால்  https://www.instagram.com/reel/C3-tN80PsfT/ இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version