கணவருடன் விவாகரத்து.. பிரியங்கா நல்காரி வெளியிட்ட போட்டோ.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

சினிமா, சீரியல் நடிகைகள் சிலரை பொருத்தவரை விவாகரத்து என்பது குளித்துவிட்டு உடை மாற்றுவது போல மிக சாதாரணமான ஒரு நிகழ்வாக தான் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஒரு குடும்பத்தில் வளர்க்கப்படும் பெண், திருமணம் என்ற ஒரு மங்கல நிகழ்வின் மூலமாக இன்னொரு ஆணின் கையில் ஒப்படைக்கப்படுகிறார். அவர் எதிர்காலமே அந்த ஆணினிடம் தான் என்ற நிலையில், ஒரு குடும்பம் தன் பெண்ணை ஒரு ஆணிடம் தாரை வார்த்து கொடுக்கிறது.

அந்த ஆணும் அந்த வாழ்க்கையை உணர்ந்து, தன்னை நம்பி வந்த அந்த பெண்ணை காலம் முழுவதும் தனது மனைவியாக, தன் பிள்ளைகளுக்கு தாயாக, குடும்பத் தலைவியாக அங்கீகரித்து சந்தோஷமாக வாழ்கின்றனர்.

அதேபோல் அந்த பெண்ணும், தனது கடமை உணர்வோடு புகுந்த வீட்டில் மரியாதையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, அந்த வாழ்க்கைக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுத் தருகிறார்.

திருமணமும் சீரியல் காட்சி போல…

ஆனால் சினிமாவில், சீரியலில் உள்ள நடிகர் நடிகைகள் சிலரை பொறுத்த வரை, திருமணம் என்பது அவர்களுக்கு சினிமாவில் வரும் ஒரு காட்சி போலவும், சீரியலில் நடிக்கும் ஒரு காட்சி போலவும் தான் இருந்து வருகிறது.

பெரும்பாலான நடிகைகள் திருமண வாழ்வில் கடைசி வரை நீடிக்காமல் போவதற்கு காரணம், அவர்களுக்கு சினிமா, சீரியல் போன்றவை தந்த போதை மயக்கம் தான்.

ஒரு காட்சியில் நடித்தால் கைநிறைய சம்பளம், ஒரு படத்தில், ஒரு சீரியலில் நடித்தால் லட்சக்கணக்கில் சம்பளம் என்ற நிலையில், அவர்கள் திருமண வாழ்க்கையை மிக மிக ஒரு சாதாரணமான ஒரு நிகழ்வாக தான் பார்க்கிறார்கள்.

பிரியங்கா நல்காரி

நடிகை பிரியங்கா நல்காரி, சன் டிவியில் ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். இவர் சீதாராமன் என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

ரோஜாவை தொடர்ந்து சீதா ராமன் சீரியல்

இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா நல்காரி, சீதாராமன் சீரியலில் இருந்து வெளியேறினார். கணவர் விரும்பாததால் அந்த சீரியலில் அவர் நடிக்கவில்லை என்று துவக்கத்தில் கூறப்பட்டது.

ஆனால் சில மாதங்கள் கழித்து மீண்டும் நளதமயந்தி என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகி, இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார் பிரியங்கா நல்காரி.

கணவரை பிரிந்து விட்டார்

திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், கணவரை அவர் பிரிந்து விட்டார் என்ற செய்தி, சில மாதங்களுக்கு முன் வெளியானது. அவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை நீக்கியது மட்டுமின்றி சோகமாக இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் பதிவிட்டு கொண்டிருந்தார்.

விவாகரத்து

அதனால் பிரியங்கா நல்காரிக்கும், அவரது கணவருக்கும் விவாகரத்தானது உண்மைதான் என்று அனைவருமே நினைத்தனர்.

தனது பிறந்த நாளில்…

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை பிரியங்கா நல்காரி, தனது கணவருடன் கொண்டாடி இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு, விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பிரியங்கா நல்காரி.

அதில் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு கேக் வெட்டும் காட்சிகளையும் பகிர்ந்திருக்கிறார்.

கணவருடன்தான் இன்னும் இருக்கிறார்

இதன் மூலம் தன் கணவருடன்தான் இன்னும் பிரியங்கா நல்காரி இருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் அதே வேளையில் ஏன் சமூக வலைதளங்களில் தன் கணவருடன் இருந்த புகைப்படங்களை அவர் அகற்றினார் என்பதும் மிகப் பெரிய கேள்வி குறியாக இருக்கிறது. இந்நிலையில் தனது கணவருடன இருக்கும் அவரது பர்த்டே புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடப்பட்டது.

ரசிகர்களுக்கு ஷாக்

கணவருடன் விவாகரத்து செய்துவிட்டார் என கருதிய நிலையில், பிரியங்கா நல்காரி கணவருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு. ரசிகர்களை ஷாக் ஆக செய்திருக்கிறார் பிரியங்கா நல்காரி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version