என் புருஷனை பிரிய காரணம் இது தான்.. போட்டு உடைத்த ரோஜா பிரியங்கா நல்காரி..!

சினிமா நடிகைகளை போலவே, சீரியல் நடிகைகளுக்கும் இந்த சாபம் இருக்கும் போல இருக்கிறது. ஏனெனில் பல சீரியல் நடிகைகள் விரைவில் தங்களது கணவர்களை பிரிந்து விடுகின்றனர்.

நடிப்பு துறையில் இருக்கும் பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள், ஒரு கட்டத்தில் மற்ற ஆண்களுடன் நடிப்பதை அவர்கள் விரும்புவது இல்லை. ஆனால் அதை மனைவிகளாக உள்ள நடிகைகள் ஏற்பது இல்லை. இதுவே அவர்களது பிரிவுக்கு காரணமாகி விடுகிறது.

பிரியங்கா நல்காரி

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான சீரியல் ரோஜா. இது பார்வையாளர்களின் அதிக வரவேற்பை பெற்ற ஒரு சீரியலாக இருந்தது. இதில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியலில் நடித்ததால், மக்கள் மத்தியில் வேற லெவலில் ரீச் ஆனார்.

மலேசியாவில் திருமணம்

இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில், பிரியங்கா நல்காரி தனது நீண்ட நாள் காதலரான ராகுல் வர்மாவை திருமணம் செய்துக்கொண்டார். அவர் மலேசியாவில் தொழிலதிபராக இருக்கிறார். இவர்களது திருமணம் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் மிக எளிமையாக நடந்தது.

இருவரது குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்று யாருமே இவர்களது திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை. அவர்கள் இரண்டு பேர் மட்டுமே கோவிலுக்கு சென்று, மாலை மாற்றி தங்களது திருமணத்தை முடித்துக்கொண்டனர்.

சீதாராமன் சீரியல் விலகல்

இந்த திருமணத்துக்கு பிறகுதான் பிரியங்கா நல்காரி சீதாராமன் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த சிறிது நாட்களில், அந்த சீரியலில் நடிக்காமல் அவர் விலகி விட்டார். அதற்கான காரணம் அவரது கணவர்தான். அவர் பிரியங்கா நல்காரியை நாடகங்களில் தொடர்ந்து அனுமதிக்கவில்லை என்ற விவரம் பின்னர் தெரிய வந்தது.

இதையும் படியுங்கள்: “அந்த நடிகை 10 நிமிஷத்துல முடிச்சுடுவாங்க.. எனக்கு 45 நிமிஷம் வேணும்..” – மான்யா ஆனந்த் ஓப்பன் டாக்..!

ஆனால் அதெல்லாம் பொய் என்று சொல்கிற வகையில், ஜீ தமிழ் சேனலில் நள தமயந்தி என்ற சீரியலில் கமிட் ஆன பிரியங்கா நல்காரி இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணனும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

புகைப்படங்கள் டெலீட்

ஆனால், தன்னுடைய வலைதள பக்கத்தில் பிரியங்கா நல்காரி, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், திருமண புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் டெலீட் செய்திருக்கிறார்.

நீங்கள் சிங்கிளா?

அதுமட்டுமின்றி இன்டஸ்கிராமில் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்று கேள்வி கேட்ட போது அதற்கு ஆமாம் என, பதிலளித்து இருக்கிறார் பிரியங்கா.இவரது இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை தருவதாக இருந்துள்ளது.

அப்போது, இதுவரை பிரியங்கா நல்காரி குறித்து வந்த அனைத்து தகவல்களும் உண்மைதான். அவர் கணவரை பிரிந்து விட்டார். அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது போன்ற தகவல்களும் உண்மையாக தான் இருக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. தொடையழகி மேகா ஆகாஷ்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

பிரிவுக்கான காரணம்

இதை ரசிகரின் கேள்விக்கு ஆமாம், நான் சிங்கிள்தான் என்று பதிலளித்த வகையில் அவரே இதை உறுதி செய்திருக்கிறார். ஆனால் அவர்கள் ஏன் பிரிந்தார்கள், அவர்கள் பிரிவுக்கான காரணம் என்ன போன்ற விஷயங்களை அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லாமல்தான் இருந்து வருகிறார்.

சீக்கிரமாக அவரது வாழ்வில் என்ன நடந்தது, நீண்டகாலமாக காதலித்து திருமணம் செய்த தனது கணவரை பிரிய காரணம் என்ன போன்ற விஷயங்களையும் அவர் விரைவில் தெரியப்படுத்துவாரா என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

என் புருஷனை பிரிய காரணம் என்னை நடிக்க வேண்டாம் என மறுத்ததுதான் என்று மறைமுகமாக போட்டு உடைத்திருக்கிறார் ரோஜா நடிகை பிரியங்கா நல்காரி..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version