“இரண்டே ஏலக்காய்..!” – பிள்ளையாருக்கு வைத்து வழிபட இதனை நன்மைகளா?

 அற்புதமான இந்த மனிதப் பிறவியை எடுத்து இருக்கும் மனிதர்கள் அனைவருமே தங்கள் வாழ்க்கையின் நெடிய லட்சியங்களுக்காக ஒவ்வொரு நாளும் போராடி வாழ்வை  வாழ்வாங்கு வாழ எண்ணற்ற வழிகளில் பாடுபட்டு வருகிறார்கள்.

 கடவுள் பக்தி இருக்கும் அனைவருமே தங்களுக்கு ஏற்படுகின்ற போராட்டத்தை எளிதில் தீர்த்துத் தருமாறு கடவுளிடம் முறையிடுவதும் இதனை தீர்த்து வைத்தால் அதற்காக சில பரிகாரங்களை செய்யவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

 இந்த சூழ்நிலையில் எந்த மனிதனும் தனது வீட்டில் அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் குடும்பத்தில் தீராத சண்டை, கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படுதல், குழந்தைகளுக்கு தொடர்ந்து பிரச்சனை வருதல் இவையெல்லாம் இருந்து மன நிம்மதியே இல்லை என்று தவிர்க்க கூடிய நபர்கள் இரண்டு ஏலக்காயை வைத்து பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைவதோடு மேற்கூறிய அந்த கஷ்டத்தில் இருந்தும் விடுதலை பெறலாம்.

 நம்பிக்கையோடு இதை செய்து பார்த்தால் உங்கள் பிரச்சனைகள் வந்த திசை தெரியாமல் போய்விடும். தீர்க்க முடியாத இந்த பிரச்சனைகள் தீர நீங்கள் செவ்வாய்க்கிழமை அன்று விநாயகருக்கு எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் நாட்களில் அசைவ உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

 சுத்தபத்தமாக இருப்பது மிகவும் அவசியம் அப்படி நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது வீட்டில் பூஜையறை இருந்தாலும் இல்லையென்றாலும் பிள்ளையார் சிலைக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி நாட்டு சர்க்கரையை கலந்து வைத்துக் கொண்டு இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

 வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று இதுபோல 11 வாரங்கள் நீங்கள் செய்து வந்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எல்லா பிரச்சனைகளும் விலகி விடும் மேலும் நீங்கள் விநாயகருக்கு நெய்வேத்தியமாக வைத்த அந்த கலவையை பசுமாட்டிக்கோ காக்கை குருவிகளுக்கு உணவாக அளித்து விடலாம். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் கட்டாயம் உங்கள் வீட்டில் மாற்றம் ஏற்படும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …