மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் பிரச்சனைகள் துரத்திக் கொண்டு வருவது தினமும் நடக்கக்கூடிய நிகழ்வுதான். இந்த பிரச்சனைகளிலிருந்து நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் அதற்குரிய பரிகாரத்தை தக்க நேரத்தில் செய்யும்போது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சக்சஸ் அடைய முடியும்.
அப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள விதவிதமான பரிகாரங்கள் உள்ளது.எனவே அந்த பிரச்சனைகளுக்கு ஏற்றபடி நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரச்சினைகளும் பரிகாரங்களும்
பிரச்சனை 1 மற்றும் பரிகாரம்
உங்களுக்கு பூர்வீக சொத்து கிடைப்பது தாமதம் மற்றும் பிரச்சனைகள் உள்ளது என்றால் நீங்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு செவ்வாய் தோறும் அரளிப்பூ மாலை சாத்தி பூஜை செய்தால் விரைவில் பூர்வீக சொத்து வந்து சேரும்.
பிரச்சனை 2 மற்றும் பரிகாரம்
வராத கடனை வசூலிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் அந்த கடனை வசூல் செய்ய சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சவரம் செய்து கொண்டு கடனை வசூலிக்க செல்லுங்கள். அப்படி செல்லும் போது நீங்கள் புதன்கிழமை செல்வது மிகவும் நல்லது. புதன்கிழமை என்றால் கண்டிப்பாக உங்கள் கடன் எளிதில் வசூல் ஆகும்.
பிரச்சனை 3 மற்றும் பரிகாரம்
என்ன செய்தும் எப்படியெல்லாம் நாம் முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் உங்களது காதல் கைகூடவில்லை என்ற மன வருத்தத்தில் இருப்பவர்கள் என்றால் நீங்கள் கட்டாயம் சித்திரை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை குறிப்பாக வள்ளி தெய்வானையோடு சேர்ந்திருக்கும் முருகனை வழிபடுவதன் மூலம் உங்கள் காதல் கைகூடி விரைவில் திருமணம் ஆகும்.
பிரச்சனை 4 மற்றும் பரிகாரம்
சனிக்கிழமைகளில் விரதம் இருந்து நவகிரகங்களை நீங்கள் ஒன்பது முறை சுற்றி வரும்போது வீட்டில் ஏற்படும் எந்த விதமான பிரச்சனையானாலும் சமூகத் தீர்வை எட்டிப் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை இது உருவாக்கித் தரும்.
வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் விரதத்தை மேற்கொள்வதன் மூலம் உடல் உபாதைகள் இருந்து தப்பிப்பதோடு மன அமைதி மற்றும் பிரச்சனைகளால் ஏற்படும் தாக்குதல் குறையும்.
பிரச்சனை 5 மற்றும் பரிகாரம்
வீட்டில் தீய சக்திகள் நடமாட்டம் உள்ளது என்று உங்கள் மனம் கூறினால் 7 பல் வெள்ளைப் பூண்டு அதனோடு 7 வரமிளகாய் இவற்றை கோர்த்து வீட்டு வாசலில் கட்டி வைத்தால் தீய சக்திகள் உள்ளே வராது.
ஒரு பல் பூண்டு ஒரு மிளகாய் என்று மாறி மாறி கோர்த்து கட்டி தொங்கவிடுங்கள். பத்து நாட்களுக்கு ஒரு முறை இந்த பூண்டையும் வரமிளகாயும் மாற்றி விட வேண்டும்.
பிரச்சனை 6 மற்றும் பரிகாரம்
வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் தொட்டியில் நீங்கள் தொட்டா சிணுங்கி செடியை வளர்த்து வந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படாது.