தற்சமயம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக சமீபத்தில் நடிகர் கார்த்தி தயார்ப்பாளர் சங்கத்திடம் இது குறித்து பேசினார்.
அதற்கு பிறகு தற்சமயம் சினிமா துறையில் உள்ள பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு தீர்மான கூட்டத்தை போட்டனர். நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் என்று பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதிய தீர்மானம்:
அதில் பல விஷயங்கள் ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது. முக்கியமாக முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பெரிய திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் அதாவது இரண்டு மாதங்கள் கழித்துதான் ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Dhanush at the Filmfare Awards South 2017 Press Meetஇதற்கு முன்பு 50 நாட்களுக்குப் பிறகு வெளியிடலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதேபோல நடிகரும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு அதில் பணிபுரியாமல் அடுத்து வேறு ஒரு திரைப்படத்தில் சென்று பணி புரிகிறார்கள்.
இது வட்டிக்கு வாங்கி தொழில் செய்யும் பல தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் இனிவரும் காலங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டால் அந்த திரைப்படத்தை முடித்து கொடுத்துவிட்டுதான் அடுத்த படத்தில் பணிபுரிய செல்ல வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது.
ஹன்சிகா மீது குற்றச்சாட்டு:
மேலும் தனுஷ் விஷயத்திலும் முன் எந்தெந்த தயாரிப்பாளரிடம் அவர் முன்பணம் வாங்கி இருக்கிறாரோ, அவர்களுக்கெல்லாம் அவர் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் ஒரு பேட்டியில் பேசும் பொழுது நடிகை ஹன்சிகா குறித்து பல விஷயங்களை முன் வைத்திருந்தார்.
மும்பையில் இருந்து சென்னைக்கு நடிக்க வரும் ஹன்சிகா மும்பையில் தனது வீட்டில் இருந்து ஏர்போர்ட்டிற்கு வருவதற்கு பௌன்சர்கள் வேண்டும் என்கிறார். அதேபோல ஏர்போர்ட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவதற்கும் பௌன்சர்கள் வேண்டுமாம்.
இது இல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஏழு உதவியாளர்கள் தனக்கு வேண்டும் என்கிறார். அவருக்கு எதற்காக இத்தனை பௌன்சர்கள் இத்தனை உதவியாளர்கள் அந்த நடிகை என்ன தீவிரவாதியா, அது இல்லாமல் இந்த பௌன்சர்களுக்கும் உதவியாளர்களுக்கும் தயாரிப்பாளர்தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிறார்.
இதில் என்ன நியாயம் இருக்கிறது. இதை நடிகர் சங்கம் தட்டிக் கேட்க வேண்டும். அவர் அழைத்துவரும் பௌன்சர்களுக்கும் உதவியாளர்களுக்கும் அவர் வாங்கும் சம்பளத்தில் இருந்துதான் கொடுக்க வேண்டும் உதவியாளர்கள், பௌன்சர்கள் என அவர் அழைத்து வருபவர்கள் எல்லோருக்கும் எப்படி தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க முடியும் என்று கேட்டிருக்கிறார் கே ராஜன்.