கடவுள் விஜய்க்கு வரம் கொடுத்துள்ளார்.. ஆனால், அஜித்திற்கு.. தயாரிப்பாளர் ரவீந்தர் சொன்னதை கேளுங்க..!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரவீந்தர் சந்திரசேகர். இவர் சென்னையில் சொந்தமாக லிப்ரா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் பல்வேறு திரைப்படங்களை இவர் தயாரித்து வெற்றி கண்டு இருக்கிறார். இருந்தாலும் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ சீரியல் நடிகை மகாலட்சுமியை மறுமணம் செய்து கொண்டதில் இருந்து தான்.

தயாரிப்பாளர் ரவீந்தர்:

இவர்களது இந்த திருமணம் மிகப்பெரிய சர்ச்சிக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டு இணையதளங்கள் முழுக்க வைரலாக பேசப்பட்டது. இதனால் ரவீந்திரன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக பவ்யமான தோற்றத்தில் இருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமி பருமனான இந்த நபரை திருமணம் செய்து கொண்டது வெறும் பணத்திற்காக தான் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார் .

இதன் மூலம் இவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியிருந்தார்கள். இதனிடையே திருமணம் ஆகிய ஓராண்டிலேயே ரவீந்தர் சிறைக்கு சென்றார்.

ஆம், பல லட்சம் பணம் மோசடி செய்த விவகாரத்தில் ரவீந்தர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .

புழல் சிறையில் கொடுமை:

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட ரவீந்தர் பின்னர் ஜாமினில் வெளியே வந்து தான் பட்ட கொடுமைகளை பல்வேறு விதமான சேனலுக்கு யூடியூப் பேட்டி கொடுத்தார்.

இதை அடுத்து மீண்டும் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தொடர்ச்சியாக திரைப்படங்கள் தயாரிப்பதிலும் திரைப்படங்கள் குறித்த விமர்சிப்பதுமாக இருந்து வருகிறார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வந்த அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் யூடியூப்பில் வழக்கம் போல் பிக் பாஸ் விமர்சனத்தை செய்தார்.

தனக்கு நுரையீரலில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு வாரம் ஐசியூவில் சிகிச்சை பெற்றதாக கூறினார்.

விஜய்யை விட அஜித் தான் பெஸ்ட்:

பல பேட்டிகளில் இவர் பிரபலங்களை குறித்தும் நேர்காணல்களில் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது அஜித் மற்றும் விஜய் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார் தயாரிப்பாளர் ரவிந்தர்.

இந்த உலகம் அஜித்தை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் அஜித் சாரிடம் இருக்கும் அந்த டிசிப்ளின் தான் அதை அஜித் சாரிடம் பழகாதவனும் பார்க்காதவனும் கூட உணர்ந்து விடுகிறார்கள்.

ஒரு ரசிகன் தன் தலைவனை பார்த்து போட்டோ கூட எடுக்க முடியாது. ஆனாலும் அவன் தீவிர ரசிகனாக இருப்பதற்கு காரணம் அஜித்தின் தரமான குணங்கள் தான்.

அந்த அளவுக்கு ரசிகர்கள் அவர்கள் மீது தாக்கத்தை வைத்திருக்கிறார்கள் என்றால் அது கடவுளுக்கு சமம். அதன்படி பார்த்தால் கடவுள் விஜய் சாருக்கு வரம் கொடுத்து விட்டார்.

ஆனால், அஜித் சாருக்கு வரம் கொடுக்கவில்லை. நான் உன் கூடவே இருக்கிறேன் என கூறிவிட்டார் என அஜித் மற்றும் விஜய்க்கு இடையே இருக்கும் வித்தியாசத்தையும் அவர்களின் நல்ல பண்புகளை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version