இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா மகாலட்சுமி-யை டைவர்ஸ் பண்ணி இருப்பேன்..! – குண்டை தூக்கி போட்ட ரவீந்தர்..!

பிரபல தயாரிப்பாளரும் விமர்சகருமான ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை VJ மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பெயரை டேமேஜ் ஆக்கி கொண்டிருந்த நடிகை VJ மகாலட்சுமி ரவீந்திரநாத் திருமணம் செய்து கொண்டது பலராலும் விமர்சிக்கப்பட்டது. சிலரால் கேலி செய்யப்பட்டது.

ஆனால் தங்களை நோக்கி வரக்கூடிய அப்படி என கேள்விகளுக்கு பொறுமையாக நின்று பதில் அளித்து வந்தனர் மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் ஜோடி. அவ்வப்போது சமூக வலைதளங்களில் தங்களுடைய ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இவர்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் கிட்டத்தட்ட ஒரு மாதம் இவர்கள் பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்கள் முழுதும் நிரம்பிக் கிடந்தது. இந்நிலையில் சமீபத்தில் instagram நேரலையில் பேசிய ரவிந்தர் இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தால் மகாலட்சுமியை டைவர்ஸ் பண்ணி இருப்பேன் என்று கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் மற்றும் நடிகை VJ மகாலட்சுமி இருவரும் கடந்து சில மாதங்களுக்கு முன்பு எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். எங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தங்களுடைய திருமண புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தனர்.

அதன் பிறகு இவர்களைப் பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் முழுதும் நிரம்பிக் கிடந்தது. பல்வேறு தரப்பினரும் இவர்களுடைய திருமணம் குறித்து விமர்சனங்களையும் கேலியான கருத்துக்களையும் வைத்து வந்தனர். குறிப்பாக ரவீந்தரை வெறும் பணத்திற்காகத்தான் VJ மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்ற விமர்சனம் ஓங்கி ஒலித்தது.

இதற்கு பதில் அளித்த VJ மகாலட்சுமி நான் பணத்திற்காக அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அது என்னிடமே நிறைய இருக்கிறது. அவருடைய அப்ரோச் எனக்கு பிடித்திருந்தது. எனவேதான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று கதராத குறையாக VJ மகாலட்சுமி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் லைவில் பேசியிருக்கும் ரவிந்தர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது என்னுடைய மனைவி மகாலட்சுமி தான் நடித்த அன்பே வா சீரியலை தொடர்ந்து பார்க்க வைக்கிறார்.

இந்த சீரியலை நான் பார்க்க வேண்டும் என்று முன்பே கூறியிருந்தால் மகாலட்சுமியை டைவர்ஸ் பண்ணி இருப்பேன் என்று நகைச்சுவையாக ஒரு பதிலை ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய இவர் ஆத்தாடி இதையே தலைப்புச் செய்தி ஆக்கிடுவாங்களே என்று பொய்யாக கவலைப்படவும் செய்தார். இந்த நேரலையின் போது இந்த ஸ்கிரீனில் மகாலட்சுமி தோன்றவே இல்லை. இதை எடுத்து அவர் வெட்கப்படுவதாக ரவீந்தர் கலாய்த்து இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English :  Producer Ravindhar has recently revealed that his wife VJ Mahalakshmi is forcing him to watch the popular Tamil serial Anbe Vaa.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version