ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க!.. இனிமே இப்படி பண்ணாதீங்க.. தங்கலான் குறித்து பேசிய தயாரிப்பாளர்!.

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு இன்று வெளியான திரைப்படம்தான் தங்கலான் திரைப்படம். பழங்குடியின மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை பேசும் வகையில் இருக்கும் என்பதுதான் ஆரம்பத்தில் படம் குறித்து எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் போக போக தங்கம் தேடுவதில் நடக்கும் பிரச்சினைககளாகதான் இந்த படம் இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல படத்தின் டிரைலரும் அமைந்திருந்தது. இந்த நிலையில் படம் உண்மையில் தங்கம் தேடுவதை வைத்து தான் செல்கிறது.

ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க

ஆனால் அதை  இந்த பழங்குடியின மக்கள் வெள்ளையர்களுக்காக செய்கின்றனர் என்று படத்தை பார்த்தவர்கள் பேச துவங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் வெற்றி பெறுமா என்பது ஒரு பக்கம் பேச்சாக இருந்து வருகிறது.

 

 

ஏனெனில் இதற்கு இணையாக டிமாண்டி காலனி 2 திரைப்படமும் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா திரைப்படமும் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய தயாரிப்பாளர் வெங்கடேசன் கூறும் பொழுது தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் பட்டியலின சமூக மக்களை குறித்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது. ஆனால் நேரடியாக இன்ன சாதி என அதில் பேசவில்லை.

இனிமே இப்படி பண்ணாதீங்க

ஆனால் இப்பொழுது எல்லாம் அவர் அவர்களின் வலிகளை கூறுகிறோம் என்று குறிப்பிட்ட சமூகத்தையும் மதத்தையும் மட்டும் வைத்து படம் எடுக்கின்றனர். இது மற்ற சமூகத்தால் வெறுக்கப்படுகிறது. சினிமா என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. மக்கள் முன்பு போல் இல்லை.

இப்பொழுது அவர்கள் தெளிவாகிவிட்டனர். எனவே அவர்களுக்கு ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம்தான் தேவை தங்கலானை பொறுத்தவரை அதில் ரஞ்சித் பல அரசியல்களை பேசி இருக்கிறார். இப்போது மக்களுக்கு அந்த மாதிரி சொந்த கருத்துக்களை கொண்ட திரைப்படங்கள் வேண்டாம் என்று நினைக்கின்றனர்.

பேசிய தயாரிப்பாளர்

அவர்கள் ஒரு ஜாலியான திரைப்படத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் சினிமாவிலும் அரசியலிலும் நல்லவர்களை சம்பாதிக்கிறோமோ இல்லையோ எதிரிகளை மட்டும் சம்பாதித்து விடக்கூடாது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் டிஜிட்டல் மீடியா இருக்கு. படத்தை பார்த்துவிட்டு அவர்கள் அனைவரும் சொந்த கருத்தை எழுதுவார்கள்.

ஒரு ஜாலியான என்டர்டைன்மெண்ட் திரைப்படம் திரைக்கு வரும் பொழுது அது மக்களுக்கு பொழுதுபோக்கான ஒரு படமாகவும் இருக்கும். அதிக வெற்றியையும் பெற்றுக் கொடுக்கும். எனவே இந்த ஜாதி மதம் தொடர்பான படங்களை எடுக்காமல் ஒரு எண்டர்டைன்மெண்ட் படங்களை இயக்குனர்கள் எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார் வெங்கடேசன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam