வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள் அன்று போல் என்றும் பளிச்சென்று இருக்க எளிய டிப்ஸ்..!

 மர சாமான்கள் என்றால் அது அந்தஸ்தின் அடையாளமாக ஒரு காலத்தில் விளங்கியது என்று கூறலாம். பொதுவாக வீட்டு உபயோகத்தில் அதிகளவு மரச்சாமான்கள் பயன்பாட்டில் இருந்தது. அது மட்டுமல்லாமல் அதை மிகச் சிறந்த முறையில் அன்று பராமரித்து வந்தார்கள்.

 அந்த மாதிரியான விலை உயர்ந்த மரச் சாமான்களை நாம் கரையான் மற்றும் பூஞ்சைகளின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதின் மூலம் தான் நாம் அடுத்தடுத்து தலைமுறைக்கு அதை கொண்டு சேர்க்க முடியும்.

 அந்த வகையில் மர சாமான்களுக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கக்கூடிய இந்த கரையான்கள் செங்கல்களில் கூட ஓட்டை போட்டுக் கொண்டு செல்லக்கூடிய தன்மை கொண்டது.

 எனவே மரத்தை அழிப்பதில் இதன் பங்கு மிகவும் பெரிய அளவு உள்ளது என்று கூறலாம். உங்கள் வீட்டில் இருக்கும் மரச் சாமான்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை டெர்மின்ட் கண்ட்ரோல் என்ற பூச்சிக்கொல்லியை அடித்து விடுவதின் மூலம் பூஞ்சை மற்றும் கரையான் பாதிப்புகளிலிருந்து நீங்கள் உங்கள் பண்டைய மரச்சாமான்களை மட்டும் அல்லாமல் தற்போது வாங்கி வைத்திருக்கும் மரச்சாமான்களை காப்பாற்றி விடலாம்.

மேலும் வாரம் ஒரு முறையாவது உலர்ந்த துணியால் மரச் சாமான்களை சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளை வினிகர்  கலந்த நீரைக் கொண்டு நீங்கள் லைட்டாக ஈரமாக்கி துடைக்கலாம்.

 துடைத்த பின் நீங்கள் இதை குறைந்தது 2 மணி நேரம் ஆவது சூரிய ஒளியில் படுமாறு வைக்க வேண்டும். அதிகளவு கரையான் பாதிப்பு இருந்தால் கட்டாயம் நீங்கள் வேப்பிலை பொடியை கரையான்கள் உள்ள மர சாமான்களில் தூவி விட்டால் கரையான் தொல்லை அடியோடு நீங்கிவிடும்.

 மழை பெய்யக்கூடிய இடங்கள், குளிர்காலங்களில் மரச்சாமான்களில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சைகள் தோன்றும். இதை நீக்க நீங்கள் எலுமிச்சை நீரில் மர சாமான்களை துடைத்து விடுங்கள். இதன் மூலம் பூச்சிகளின் பாதிப்பை நீங்கள் குறைக்கலாம்.

இந்த மரப் பொருட்களை எப்போதும் நீங்கள் குறைந்தது 2 மணி நேரமாவது வெயிலில் வைக்க வேண்டும்.  மர சாமான்களை தேன் மெழுகு கொண்டு நீங்கள் சுத்தம் செய்யும்போது பள பள என்று மாறும்.

 கரையான் தாக்குதலுக்கு உள்ளாகாமல் இருக்க குறைந்த பட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது உங்கள் மரச்சாமான்களுக்கு பாலிஷ் போட்டால் பொலிவுடன் இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …