பொன்னியின் செல்வன் – திருட்டுத்தனமாக படத்தை வெளியிட்டு வருபவர்களுக்கு மணிரத்தினத்தின் சவுக்கடி.!

நேற்று உலகம் முழுவதும்  இயக்குனர் மணிரத்தினத்தின் கைவண்ணத்தில்  நீண்ட நாள் கனவான கல்கியின் பொன்னியின் செல்வன்  திரைப்படம் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இருப்பது அனைவரும் அறிந்ததே.

மிக முக்கியமான முன்னணி நடிகைகள் அனைவரும் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்கள். இதன் மூலம் இந்தப் படம் பெரும் பாலும் அதிக வசூலை வாரிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான லைக்கா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பொருட்செலவு பற்றி கவலைப்படாமல் படம் சிறந்த முறையில் வர வேண்டும் என்ற நோக்கத்தோடு செலவு செய்திருக்கிறார்கள்.

இது போல பல கோடிகளில் செலவு செய்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்து வரக் கூடிய நிலைமையில் திடீரென இணையத்தில் புது படங்களை வெளியிட்டு அந்த தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போடக்கூடிய நிலைமை  இன்று ஏற்பட்டுள்ளது.

 இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னியின் செல்வன் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டால் அந்த தளத்தை உடனே மூட வேண்டும்.

இல்லையெனில் தயாரிப்பாளர் மாபெரும் நஷ்டத்தை சந்திப்பார் என  லைகா நிறுவனத்தின் சார்பில் விஜய சுப்பிரமணியன்  நீதிமன்ற விசாரணையின் போது வாதிடுகிறார்.

லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கின் மூலம் தப்பித்தவறி பொன்னியின் செல்வன் படமானது இணையத்தில் வெளிவந்த அதாவது 2405 இணையதளங்களில் வெளிவந்தால் உடனே அந்த தளங்களை முடக்க வேண்டும் என்ற தடையை தரவேண்டி விவாதம் செய்தனர்.

 இந்த முன் ஏற்பாட்டை செய்து கொடுக்க மூளையாக செயல்பட்டவர் நம் இயக்குனர் மணிரத்தினம் தான். இவர் செய்த செயலால் திருட்டு வீடியோக்களையும் படங்களையும் வெளியிட கூடியவர் நபர்களுக்கு சவுக்கடி தந்தது போல் இந்த நிகழ்வு அமைந்து விட்டது என்று அனைவரும் பாராட்டுகிறார்கள்.

இதனால் பொன்னியின் செல்வன் இணையத்தில் வெளியால்  அந்தத் தளம் முடக்கப்படும் என்ற முக்கியமான எச்சரிக்கையால் படக்குழு நிம்மதியாக உள்ளது. நிச்சயமாக வசூலில் மிகப்பெரிய சாதனை உலக அளவில் நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …