இட்லி, தோசைக்கு இந்த சைட் டிஷ் செஞ்சு பாருங்க..! – உங்க தெருவே கமகமக்கும்..!

இட்லிக்கும், தோசைக்கு சரியான சைடிஷ் ஆக இருக்கும் புதினா தொக்கு. இந்த தொக்கினை வீட்டில் அரைத்து விட்டால் இரண்டு இட்லிக்கு பதிலாக கூடுதலாக இரண்டு இட்லி சாப்பிடலாம் என்று தூண்டக்கூடிய வகையில் இந்தத் தொக்கின் வாசம் உங்களை சுண்டி இழுக்கும்.

உடலுக்கும் நன்மைகள் தரக்கூடிய இந்த புதினா தொக்கை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் எப்படி செய்யலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

 புதினா தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:

  1. பிரஸ் பொதினா இரண்டு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. துவரம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  4. உளுந்து பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
  5. வர மிளகாய் உங்கள் காரத்திற்கு ஏற்றபடி
  6. தேங்காய் துருவல் கால் கப்
  7. பூண்டு இரண்டு பல்
  8. புளி சிறிதளவு

செய்முறை :

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் புளியைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இதை டிரை ஆக வறுக்க இருப்பதால் நீங்கள் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை அடுத்து புதினா இலைகள் சுருங்கும் வரை பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இதன் பின்னர் இதை எடுத்து அப்படியே சூடு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பினை போட்டு புளியையும் சேர்த்துக்கொண்டு சிறிதளவு நீரை விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

 இப்போது சுவையான பொதினா தொக்கு தயார் ஆகிவிட்டது. இதனை நீங்கள் விரும்பும் இட்லிக்கோ, தோசைக்கோ சுடச்சுட உண்ணும் போது கூடுதலாக உங்களை உண்ணத் தூண்டும் எளிமையான டிஷ் என்றாலும் ஆரோக்கியத்தை பேணக்கூடிய டிஷ் ஆக இருப்பதால் குழந்தைகளுக்கு இதை உண்ண பழக்கப்படுத்தி விடுவது மிகவும் நல்லது.

 இதன் மூலம் செரிமான பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படாது அது மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கும் எளிதில் செரிமானத்தை தூண்டக்கூடிய ஆற்றல் எந்த புதினாவுக்கு உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version