கோபத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன்.. கை விரித்த புஷ்பா 2 இயக்குனர்..! – ரிலீசில் சிக்கல்..

தற்போது திரை உலகில் ட்ரெண்டிங் ஆன விஷயமாக மாறி இருப்பது ஒரு படத்தின் வெற்றிக்கு பின் அந்த படத்தின் இரண்டாம் பகுதியை எடுத்து வெளியிடுவது என்பது தற்போது அதிகரித்து உள்ளது.

மேலும் இது பகுதி இரண்டோடு முற்றுப்பெறாமல் பகுதி 3, 4 வருமா? என்று கேட்கக் கூடிய வகையில் ரசிகர்களை கட்டி போடக் கூடிய கதை அம்சம் நிறைந்த திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் அண்மையில் தமிழ் திரை உலகில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை திரைப்படமானது பகுதி 1,2,3,4 என்று வெளி வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.

கோபத்தில் இருக்கும் அல்லு அர்ஜுன்..

அந்த வகையில் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் மிகச்சிறந்த திரைப்பட நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விளம்பர நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பல்வேறு வகையான பன்முகத் திறமையை கொண்டவர்.

தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் அக்கட தேசத்தின் மருமகனாக திகழ்கிறார். இவரது குடும்பமே ஒரு திரை குடும்பம் என்று சொல்லலாம். அந்த வகையில் இது வரை 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இரண்டு முறை நந்தி விருதை பெற்றவர்.

அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2021 – ஆம் ஆண்டு வெளி வந்த புஷ்பா திரைப்படத்தைப் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த சாமி பாடல் பட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டதோடு இந்த படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று அனைவரும் கேட்க கூடிய நிலையில் இருந்தது.

புஷ்பா பகுதி 2.. கை விரித்த இயக்குனர்..

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் புஷ்பா பகுதி 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ஏகப்பட்ட வரவேற்பை பெற்றதோடு சிங்கிலை பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படமானது வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்களுக்கு காதில் தேன் வார்த்தது போல அமைந்தது.

ஆனால் இதில் தற்போது சிக்கல் ஏற்பட்டு இயக்குனர் கை விரித்த நிலையில் இந்த படத்தின் வெளியீடானது வெறும் வரும் டிசம்பர் மாதம் 6 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோபத்தில் அல்லு அர்ஜுன்..

ஆனால் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்து பார்க்கும் போது இந்த படம் டிசம்பர் 6 தேதி வருமா அல்லது இன்னும் காலதாமதம் ஆகுமா? என தெரியவில்லை.

இந்தப் படம் திரைக்கு வெளி வருவதில் தாமதம் ஆவதற்கு காரணமே இந்த படத்தின் இயக்குனரும், ஹீரோ அல்லு அர்ஜுனனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பு என்பது தற்போது வெளி வந்துள்ளது.

அத்தோடு படத்திற்காக சில காட்சிகளை திரும்ப பதிவு செய்ய 50 நாட்களுக்கு மேல் ஆகும் என அல்லு அர்ஜுனிடம் கால் சீட் கேட்டிருக்கிறார். ஆனால் அவ்வளவு நாட்கள் தர முடியாது 20 நாட்களுக்குள் படத்தை முடித்து விடுங்கள் என அல்லு அர்ஜுன் சொல்லி இருக்கிறார்.

இதனால் இயக்குனர் மற்றும் அல்லு அர்ஜுன் இடையே வாக்குவாதம் முற்றிப்போய் தன்னுடைய தாடியை ஷேவ் செய்து விட்டு குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்றுவிட்டார். மேலும் கோபமாக இருக்கக்கூடிய இயக்குனர் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டார்.

இந்நிலையில் இயக்குனர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தாலும் மீண்டும் அல்லு அர்ஜுனன் ஐரோப்பா டூர் செல்ல இருப்பதால் திரைப்படம் திரைக்கு வருமா? வராதா? என்ற கேள்வி தற்போது ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version