ப்பா.. சும்மா அள்ளுது.. வெளியானது வெறித்தனமான புஷ்பா 2 டீசர்..! திருவிழா போல கொண்டாடும் ரசிகர்கள்..!

அல்லு அர்ஜுன் தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விளம்பர நடிகராகவும், நடன கலைஞராகவும், இயக்குனர் என பன்முகத்திறமையை கொண்டு இருப்பவர்.

இதையும் படிங்க: கணவருக்கு வார்னிங் கொடுத்த விஜே மகாலட்சுமி.. தீயாய் பரவும் விவாகரத்து தகவல்..!

இவர் நடிப்பில் வெளி வந்த பல தெலுங்கு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து இரண்டு முறை நந்தி விருதுகளை பெற்றிருக்கிறார். அதோடு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

புஷ்பா 2 டீஸர்..

நடிகர் அல்லு அர்ஜுன் ஏப்ரல் எட்டாம் தேதி 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் பிரபலமான நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் ஆவார். இவரது குடும்பமே திரை கலை குடும்பம் என்று சொல்லலாம்.

இன்னிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளி வந்த புஷ்பா திரைப்படம் 2021 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றைப் பெற்றதோடு இந்த படத்தை இயக்குனர் சுகுமாரன் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் குறிப்பாக வட மாநிலங்களில் மாபெரும் வெற்றியை பெற்று தந்ததோடு இவரை ஒரு பேன் இந்திய நடிகராக மாற்றியது. அத்தோடு சுமார் 300 கோடிக்கு அதிகமான வசூலை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.

இந்த படத்தில் தான் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா.. பாடல் இடம் பிடித்து பட்டி தொட்டி எங்கும் பல கேட்டதோடு இன்றும் முணுமுணுக்கபடும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.

சும்மா அள்ளுது வெறித்தனம்..

இதனை அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா 2 படத்தின் டீசர் தற்போது வெளி வந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் புஷ்பா 2 எப்போது வரும் என்று காத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் முக்கிய முன்னணி நடிகரின் படம் வெற்றியடைந்து விட்டால் தற்போது இரண்டாம் பகுதி எடுப்பது என்பது திரை உலகில் வழக்கமாக மாறி வருகிறது. அந்த வகையில் புஷ்பா 2 படம் அல்லு அர்ஜுனனுக்கு மீண்டும் வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

திருவிழா போல ரசிகர்கள்..

இந்நிலையில் இந்த படத்தில் அல்லு அர்ஜுனனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அத்தோடு படத்திற்கான இசையை ஸ்ரீதேவி பிரசாத் அமைத்திருக்கிறார்.

எனவே படத்தில் இடம் பிடிக்கும் பாடல்கள் வேறு லெவலில் இருக்கும் என்று கற்பனை செய்து வரும் ரசிகர்களுக்கு விருந்தாக புஷ்பா 2 ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

அந்த வகையில் அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசரை பட குழுவினர் இன்று வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த டீசரை பார்த்து வரும் ரசிகர்கள் புஷ்பா 2 வேறு லெவலில் உள்ளது என்பது போன்ற கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கும் இந்த டீசர் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப ராக் ஸ்டார் நடித்திருப்பார் என்று சொல்லலாம். அதற்கு ஏற்றபடி டீசரும் அமைந்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இதை திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: முக்கிய புள்ளியிடம் லாக் ஆன ரெண்டெழுத்து நடிகை.. லகலக ரகசிய கூத்து..!

அது மட்டுமல்லாமல் பார்க்கும் போதே சும்மா அள்ளுது என்று சொல்லிக் கொள்ளும் படியாக புஷ்பா 2 டீசர் வெறித்தனமாக வெளி வந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த டீசரை நீங்கள் கண்டு மகிழ விரும்பினால் இந்த லிங்கில் சென்று பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து கொண்டாடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version