கொஞ்சும் அழகில் கோயம்புத்தூரு பொண்ணு… குயின்ஸி ஸ்டான்லியை போட்டோஸ் பாருங்க!

குயின்ஸி ஸ்டான்லி,( queency stanly)வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். சிறந்த நடன கலைஞர். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர்.குயின்ஸி, கோவையைச் சேர்ந்தவர். பிறந்தது, வளர்ந்தது கோயம்புத்தூர்தான். சுத்தமான கோயம்புத்தூரு பொண்ணு தான். பள்ளி படிப்பை முடித்ததும் கோவையில்தான். ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். படிப்பை முடித்தவுடன், மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார். கவர் ஸாங் ஆல்பம் மூலமாக, மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

queency stanly

தனிமை அது வரமா என்ற மியூசிக் வீடியோ இன்னும் குயின்ஸியை மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு, சீரியலில் நடிக்கும் வாய்ப்பு குயின்ஸிக்கு அமைந்தது. அன்பே வா என்ற சீரியலில் நீலவேணி என்ற நல்ல கேரக்டர் அமைந்தது. ஒரு கட்டத்தில், அந்த கேரக்டர் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. வரவேற்பை பெற்றது.

queency stanly

அதற்கு பின், 2019 ம் ஆண்டில், கருப்பு கண்ணாடி என்ற படத்தில் குயின்ஸி நடித்தார். அந்த படத்துக்கு பிறகு, நிறைய சீரியல்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். குயின்ஸி மிகச் சிறந்த நடனக்கலைஞர். சிறு வயதில் இருந்தே நடனமாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் குயின்ஸி. காபி 50 காதல் 50 என்ற குறும்படத்தில் குயின்ஸி ஸ்டான்லி நடித்தார். அதைத்தொடர்ந்து, விடியும் வரை காத்திரு என்ற படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடித்தார்.மேலும், 2022 ம் ஆண்டில் இந்தியன் பேஷன் டிராவல் இன்டர்நேஷனல் விருது பெற்றார்.

queency stanly

இசை ஆல்பம், சினிமா, சீரியல், குறும்படம் என்ற அடுத்தடுத்த நிலைகளை தொடர்ந்து, குயின்ஸிக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியை, ஏற்படுத்தித் தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்தாண்டு நடந்த விஜய்டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6ல் குயின்ஸி ஸ்டான்லி பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்களில் குயின்ஸி அதிகமாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். காரணம், அவரது அழகும், இளமையும், துறுதுறுப்பான பார்வையும், அவரது பண்பான நடவடிக்கைகளும் பிக்பாஸ் வீட்டுக்குள் தனி கவனத்தை கொண்டு வந்தது.

queency stanly

குறிப்பாக, மாடல் டிரஸ்சில் அம்மணி வீட்டுக்குள் கிளாமராக வலம் வந்து, பார்வையாளர்களின் நெஞ்சத்தை தொட்டார். அதுவும் சிறந்த நடனத்திறன் உள்ள குயின்ஸி, வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ வச்சுவச்சு வாடுது பாடலுக்கு, பிக்பாஸ் வீட்டுக்குள் நடனமாடி, இவ்வளவு சிறப்பாக இவருக்கு டான்ஸ் வருமா என, பார்வையாளர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.வீட்டுக்குள் இருந்த சக போட்டியாளர்கள் மட்டுமின்றி, பிக்பாஸ் பார்வையாளர்களும் குயின்ஸி நடனத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போயினர். அந்த அளவுக்கு, அந்த பாடலுக்கு சிறந்த நடனமாடி அசத்தினார் குயின்ஸி.

queency stanly

பிக்பாஸ் வீட்டில், நல்ல போட்டியாளராக இருந்த குயின்ஸி ஒரு கட்டத்தில் வெளியேற்றப்பட்டார். அதற்கு பிறகு சினிமா வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பட்ட நிலையில், பெரிய வாய்ப்புகள் எதுவும் அமைந்ததாகத் தெரியவில்லை.எனினும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக உள்ள குயின்ஸி, தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

queency stanly

ரசிகர்களின் லைக் களும் குவிகிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிக்கும் பலரும், கோயம்புத்தூரு பொண்ணு, அழகுல அசத்துதுப்பா என, கமெண்ட்டில் கூறி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …