விக்கி நயன் திருமணம்.. என்னை அழைத்து அந்த முன்னணி நடிகர் கழுவி ஊத்தினார்..! ராதிகா கூறிய தகவல்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார்.

தற்போது தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் அண்மையில் வெளிவந்த பாலிவுட் திரைப்படமான ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானோடு இணைந்து நடித்தார்.

விக்கி நயன் திருமணம்..

தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்த போது ஆரம்ப காலங்களில் நடிகர் சிம்புவோடு தொடர்பில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர்கள் காதலை பிரேக் அப் செய்து விட்டதாக செய்திகள் கசிந்தது.

இதனை அடுத்து பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த இவர் அவரோடு லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளி வந்ததை அடுத்து பிரபுதேவாவின் முதல் மனைவியின் மூலம் பிரச்சனைகள் ஏற்பட பிரபு தேவாவை விட்டு நயன்தாரா விலகினார்.

இதனை அடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா கடைசியாக பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள்.

முன்னணி நடிகர் கழுவி ஊற்றிய விவகாரம்..

இந்நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதில் ராதிகா சரத்குமார் கூறியதாவது ஒரு நாள் திடீரென்று நடிகர் தனுஷ் இடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது அதனை அடுத்து அந்த தொலைபேசியை எடுத்து நானும் பேசினேன்.

அப்போது நடிகர் தனுஷ் வழக்கம் போல் நலம் விசாரித்துவிட்டு அவருடைய பேச்சை தொடங்கினார். அந்த பேச்சில் அக்கா உங்களுக்கு தெரியுமா? விக்னேஷ் சிவனும்.. நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்.. உங்களுக்கு ஏதாவது தெரியுமா அது பற்றி..? என்று கேட்டார்.

ராதிகா சொன்ன தகவல்..

இந்த பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் அப்படியெல்லாம் எதுவும் இல்லையே எனக்கு எதுவும் தெரியாது.. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிக்கிறார்களா?

எனக்கு எதுவும் தெரியாதே எனக் கூறினேன். அதற்கு தனுஷ் நீங்கள் இதற்கு வெட்கப்படணும்.. அந்தப் படத்துல 40 நாளா நடிச்சிக்கிட்டு இருக்கீங்க.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியவில்லையா? என்று கலாய்த்தார்.

மேலும் என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு தெரியாம நீங்க நடிச்சிட்டு இருக்கீங்க.. இதுக்கு நீங்க வெட்கப்படனும்… அத்துடன் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் லவ் பண்றாங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறாங்க இது கூட உங்களுக்கு தெரியாதா..? என கழுவி ஊத்தினார்.

இதனால் எனக்கு வெட்கமாய் போய்விட்டது.. என்னடா இது என் கூட தானே இருந்தார்கள்.. இது எப்போது நடந்தது என நான் வியந்து போனேன்.. ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் முக்கால்வாசி நேரம் என்னுடன் தான் இருந்தார்கள்.

எந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களுக்குள் எங்கே காதல் வந்தது என்ன ஏது என்று எனக்கு எதுவுமே புரியவில்லை.. அதுக்கப்புறம் தான் செய்திகளை பார்த்து நான் தெரிந்து கொண்டேன் என பதிவு செய்திருக்கிறார் நடிகை ராதிகா.

இதனை அடுத்து இந்த விஷயமானது வைரலாக இணையங்களில் பரவி வருவதோடு ரசிகர்களின்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version