“லெஸ் கலோரி ராகி பூரி..!” – டேஸ்டியா எப்படி செய்யுங்க..!

பொதுவாகவே பூரி என்றால் பிள்ளைகளுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும். அதுவும் பொசு பொசு என்று பொள்ளி இருக்கும் பூரிக்கு வீட்டில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் அடிதடி கட்டாயம் நடக்கும்.

பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பூரிக்கு நாம் கோதுமை மாவை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அதற்கு மாற்றாக கோதுமை மாவு மற்றும் ராகி மாவு இரண்டையும் சேர்த்து செய்யக்கூடிய ராகி பூரியை ஒரு முறை நீங்கள் செய்து காட்டினால் பிள்ளைகள் மீண்டும் மீண்டும் செய்து தா என்று கேட்பார்கள்.

அப்படிப்பட்ட லெஸ் கலோரியில் இருக்கக்கூடிய ராகி பூரியை எப்படி செய்வது என்று எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகி பூரி செய்ய தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. ராகி மாவு ஒரு கப்
  3. தேவையான அளவு உப்பு
  4. பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

முதலில் ராகி பூரி செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு கோதுமை மாவு அதே அளவு ராகி மாவை எடுத்துக்கொண்டு அதற்குத் தேவையான அளவு உப்பினை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு கோதுமை பூரிக்கு எப்படி பிசைய தொடங்குவோமோ அதுபோல் பிசைந்து விடுங்கள்.

இந்தக் கலவையை 15 லிருந்து 30 நிமிடங்கள் அப்படியே மூடி வைத்து விடுங்கள். பிறகு திரும்ப எடுத்து மீண்டும் ஒருமுறை அதை நன்கு பிசைந்து விடவும்.

இப்போது பிசைந்த இந்த மாவை சிறு சிறு உருளைகளாக மாற்றி சம பாகங்களாக பிரித்து உருண்டைகளை சமன் செய்து வைக்கவும்.

இப்போது இந்த  உருண்டைகளை நன்கு பரத்தி எடுத்து விடுங்கள். இதனை அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடாக்கவும்.

எண்ணெய் சூடாக இருக்கும் சமயத்தில் தீயை மிதமாக வைத்துக் கொண்டு பரத்தி வைத்திருக்கும் ராகி பூரியை போட்டு பொரித்து எடுக்கவும்.

 இப்போது பூரி பொது பொது என்று பொல்லி வரக்கூடிய நிலையில் இருக்கும் சுவையான ராகி பூரிக்கு காரமான மசாலாவை வைத்து சாப்பிட்டால் படுஜோராக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …