இதை எதிர்பாக்கவே இல்ல.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ராஷி கண்ணா..!

தமிழில் பிரபலமாக இருக்கும் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகளில் நடிகை ராஷி கண்ணாவும் முக்கியமானவர் ஆவார். 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே என்கிற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ராஷி கண்ணா.

அதனை தொடர்ந்து தெலுங்கில் மனம் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வரிசையாக அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் வரத் துவங்கின.

வட இந்திய நடிகை:

அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 2018 வரை தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக வாய்ப்புகளை பெற்றார் ராஷி கண்ணா. தொடர்ந்து 15-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் வந்தார். இந்த நிலையில் இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அயோக்கியா, அடங்க மறு போன்ற திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரும் ராஷி கண்ணா தற்சமயம் அரண்மனை 4 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு:

என்னதான் ஹிந்தியில் அவர் அறிமுகமாகி இருந்தாலும் தென்னிந்தியாவில்தான் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தமிழில் எந்த அளவிற்கு அவர் பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு தெலுங்கிலும் பிரபலமாக இருக்கிறார்.

அவரது முக ஜாடை பார்ப்பதற்கு பாலிவுட் நடிகை போல இருந்தாலுமே கூட தென்னிந்திய ரசிகர்கள் அவரை உடனடியாக தங்களது விருப்ப நடிகையாக ஏற்றுக் கொண்டு விட்டனர் என்று கூற வேண்டும். இதற்கு நடுவே ருத்ரா மற்றும் ஃபார்சி என்கிற இரண்டு டிவி சீரிஸ்களில் நடித்திருக்கிறார்.

இது பாலிவுட்டில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பாலிவுட்டில் இவருக்கு தற்சமயம் வரவேற்பு வர துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா தற்சமயம் அதே போல சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனை அடுத்து தற்சமயம் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. கருப்பு உடையில் இருளுக்கு நடுவே ஒளியில் நின்று உச்சப்பட்ச கவர்ச்சியை காட்டியுள்ளார் ராஷி கண்ணா. லைட்டிங் முறையில் கூட கவர்ச்சி காட்ட முடியும் என்பதை காட்டுகிறது இந்த புகைப்படம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version