கணவரை பிரிந்த பிறகு புது வீடு வாங்கியுள்ள ரச்சிதா மகாலட்சுமி..! எப்படி இருக்குன்னு பாருங்க..!

முதன் முதலில் மாடர்ன் அழகியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமி அதன் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார்.

2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

ரக்ஷிதா மகாலக்ஷ்மி:

இந்த சீரியல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த பெரும் புகழ்பெற்றார்.

இதனிடையே அவருக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் ரக்ஷிதா மகாலட்சுமி.

இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் மூலம் மார்க்கெட்டும் உயர்ந்துவிட்டது.

கன்னட சீரியல் to தமிழ் சீரியல்:

இவருக்கு சின்னத்திரை வட்டாரத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். பார்ப்பதற்கு லட்சணமான முக சாடையோடு குடும்பப் பெண் தோற்றத்தில் இருந்தாலும்,

இவர் பிறந்து வளர்ந்தது என்னவோ பெங்களூரில் தான், ஆம் ஆரம்பத்தில் கன்னட சீரலில் நடித்து வந்த இவரது நடிப்பை பார்த்து தமிழ் சின்னத்திரை இயக்குனர்கள்,

பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலமாக இவருக்கு வாய்ப்பு கொடுத்து சின்னத்திரையில் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

தோற்றத்தில் மாநிறமாக இருந்தாலும் குடும்ப பாங்கான தோற்றத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தென்பட்டார் ரக்ஷிதா.

சீரியல் நடிகருடன் திருமணம்:

ரக்ஷிதா தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ஜோடியாக நடித்த வந்த நடிகர் தினேஷை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது வாழ்க்கை நன்றாக சென்றுக்கொண்டிருந்தது. சிறந்த ஜோடியாக ரசிகர்களால் புகழ் பாராட்டப்பட்டார்கள்.

அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ தொடங்கி விட்டார்கள்.

அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரக்ஷிதா. திருமணம் முறிவுக்கு ரக்ஷிதா தான் காரணமாக இருந்திருப்பார் என பலரும் அவரை விமர்சித்து தள்ளினார்கள்.

அதன் பின்னர் ரக்ஷிதாவின் கணவர் தினேஷும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரின் நல்ல குணத்தை பார்த்து,

ரக்ஷிதா அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தார்கள்.

ஆனால், ரக்ஷிதா அவரை ஏற்றுக் கொண்டு வாழ்வதாக தெரியவே இல்லை, மாறாக தினேஷ் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், ஆபாசமாக மெசேஜ்களை அனுப்புவதாகவும்,

இதனிடையே அவ்வப்போது ரக்ஷிதாவுக்கு இரண்டாம் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

புதிய வீடு வாங்கிய ரக்ஷிதா:

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரக்ஷிதா தற்போது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்த வயதில் தான் ஒரு புதிய வீட்டை வாங்கி இருப்பதாக அதன் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.

“தனிமையில் அமைதி இப்படித்தான் இருக்கும்….. எனது சொந்த வழியில் 33 இல் அடியெடுத்து வைக்கிறேன்” என கேப்ஷன் கொடுத்து அழகான இந்த வீட்டின் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version