மொரட்டு கட்ட.. கிளாமர் ராணி.. யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டும் ரச்சிதா மகாலட்சுமி..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமான நடிகைகளில் நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர். சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு அவ்வளவு எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது.

மிக அரிதாக சில நடிகைகளுக்குதான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் அது கொஞ்சம் எளிதாகிவிட்டது. நிறைய நடிகைகள் சீரியலில் நடித்து அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெறுகின்றனர்.

மேலும் சீரியல் நடிகைகளுக்கு அதிகமான ரசிக பட்டாளம் இருக்கிறது. குடும்ப பெண்கள் பெரும்பாலும் சீரியல் நடிகைகளை விரும்புகின்றனர் ஏனெனில் அவர்கள் தினசரி சீரியல்களில் அந்த நடிகைகளை பார்க்கிறார்கள்.

சீரியலுக்கு வரவேற்பு:

ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் திரைப்படங்களில் நடிக்கிறார்கள். அந்த படங்கள் வரும்போது மட்டும் தான் அவர்களை மக்கள் பார்க்கிறார்கள் என்பதால் சீரியல் நடிகைகளுக்கும் குடும்ப பெண்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உண்டு என்று கூறலாம்.

கன்னடத்தில் சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா மகாலட்சுமிக்கு தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்கிற விஜய் டிவி தொடரில் முதன்முதலாக வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் சில காலங்கள் மட்டுமே ஒளிபரப்பானது என்றாலும் கூட அதில் ரச்சிதாவிற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து இளவரசி என்கிற சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக அறிமுகமானார் ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பானது. அதனை தொடர்ந்து பிறகு மசாலா குடும்பம் என்கிற ஜீ தமிழ் தொடரிலும் இவர் நடித்தார்.

சீக்கிரமாகவே பிரபலமடைந்த ரச்சிதா:

தமிழில் அறிமுகமான வெகு சில வருடங்களிலேயே தமிழில் முக்கிய சேனலான விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என்ற மூன்று சேனல்களிலும் நாடகங்களில் நடித்தார் ரச்சிதா. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீசன் 2 இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதில் தங்க மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சிதாதான் நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக கவின் நடித்திருந்தார். தற்சமயம் கவின் தமிழ் சினிமாவில் பெரும் இடத்தை பிடித்திருக்கிறார். அந்த அளவிற்கு ரச்சிதா இன்னும் பிடிக்கவில்லை என்றாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதற்கு பிறகு அவர் கலந்து கொண்ட காரணத்தினால் அவருக்கு அதில் வரவேற்புகள் கிடைக்க துவங்கியது.

அதன் மூலமாக மக்கள் மத்தியில் ஒரு பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக சில சமயங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ரச்சிதா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன சீரியலில் புடவையில் வரும் ரச்சிதாவா இது என்று கூறி இந்த புகைப்படங்களை ரசித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version