இந்த மேட்டரில் ஆண்களை பார்த்தால் பொறாமையா இருக்கு..? ஓப்பனாக பேசிய ரச்சிதா மகாலட்சுமி..!

நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது கரியரை துவங்கி அதன்பிறகு வடிவழகியாக உருமாறியவர்தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.

மாடல் அழகியாக தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததன் மூலமாக இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரக்ஷிதா மகாலக்ஷ்மி:

சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார். இந்த தொடர் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

அதை எடுத்து பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சில சீரியல்களின் அடுத்தடுத்து நடித்து வந்தார் . முன்னதாக தமிழ் சீரியல்களில் நடிக்க வருவதற்கு முன்னர் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி கன்னட சீரியல்களில் நடித்து சீரியல் நடிகையாக அங்கு புகழ்பெற்று வந்தார்.

இவரது லட்சணமான அழகை பார்த்து தான் தமிழ் சீரியல்களில் வாய்ப்பு கொடுக்க தொடங்கினார்கள் .அதன் பிறகு தமிழில் நடித்து தனக்கான தனி இடத்தையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார் .

ரக்ஷிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்துக் கொண்டு இருந்தபோது அந்த தொடரில் ஹீரோவாக நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தினேஷ் – ரக்ஷிதா காதல் திருமணம் :

இவர்கள் ரசிகர்களால் மிகச் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டதோடு பல காதலர்களுக்கு உதாரணமான ஜோடியாகவும் பேசப்பட்டு வந்தார்கள் .

இவர்களை ஜோடி பொருத்தம் மிக அழகாகவும் அற்புதமாகவும் இருப்பதாக பல வர்ணித்து வந்த நிலையில் திடீரென யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

கணவரை விவாகரத்து செய்த பிறகு ரக்ஷிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் தனக்கான அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்திக் கொண்ட ரக்ஷிதாவுக்கு ரசிகர்களும் பெருக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரக்ஷிதா தினேஷை மனம் மாறி ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தினேஷ் குறித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த பிறகு அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

தினேஷ் தனக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்புவதாக கூறி அதிரடியாக புகார் தெரிவித்து வந்தார் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.

ஆண்களை பார்த்தால் அப்படி இருக்கு:

ஆனால் தினேஷுக்கு ரக்ஷிதா உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையை பல பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

இப்படியாக இவர்கள் அது விவகாரம் சென்று கொண்டிருக்க அண்மையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய வீடு ஒன்றை வாங்கிக்கொண்டு கிரகப்பிரவேசம் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார் ரக்ஷிதா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த ஒரு விஷயத்தில் ஆண்களைப் பார்த்தால் எனக்கு மிகுந்த பொறாமையாக இருக்கிறது என ஓப்பனாக பேசியிருக்கிறார் ரக்ஷிதா மகாலட்சுமி.

அதாவது, எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் ஆண்கள் 5 நிமிடத்தில் தயாராகி விடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை செலவாகிறது.

இந்த விஷயத்தில் ஆண்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது என ஓப்பனாக பேசி இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version