எனக்கு ஒருநாள் அது நடக்கத்தான் போகுது.. அதுவரை நிம்மதியா விடுங்க..! ரச்சிதா மகாலட்சுமி ஷாக் பதிவு..!

சின்னத்திரையில் நடிப்பவர்கள் தங்கள் துறையில் நடிப்பவர்களையே காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. திருமணம் செய்து கொண்ட எல்லா ஜோடிகளும் சேர்ந்து வாழ்வதும், பிரிந்து வாழ்வதும் தற்போது சகஜமாகிவிட்டது.

அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்த ரச்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். உருகி, உருகி காதலித்த இவர்கள் என்ன காரணத்தினால் பிரிந்தார்கள் என்று இன்று வரை தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில் தினேஷ் மீண்டும் ரச்சிதாவுடன் இணைந்து வாழ பல வகைகளில் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். ஆனாலும் ரச்சிதா தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் இன்று வரை கிடைக்கவில்லை.

மேலும் தற்போது பிக் பாஸ் வீட்டின் உள் இருக்கும் தினேஷை அவரது பெற்றோர்கள் சந்தித்து சில அறிவுரைகளை கூறியிருக்கிறார்கள். அதனை அடுத்து ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் விஷயம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் அவர் சாகும் நேரம் வரும் போது செத்து விட வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் தானும் ஒருத்தி. என் வாழ்க்கையை நான் நினைக்கும் படி வாழ விடுங்கள் என்ற எண்ண அலைகளை பதிவிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு தினேஷோடு இணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லை என்பதை தான் இவை சுட்டிக்காட்டுகின்றது. மேலும் அவரை இரு விஷயமாக யாரும் தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது என ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

எனவே இவர்களது பிரச்சனை விரைவில் சமூகமாக முடிய வேண்டும் என்று பலரும் பல பல வகைகளில் இருவருக்கும் சப்போர்ட்டாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

என்னார்க்கு இன்னார் என்று இறைவன் வகுத்து வைத்திருக்கக் கூடிய நியதி இடையில் இப்படி மாறுவதற்கு தம்பதிகளின் மத்தியில் ஏற்படும் ஈகோ பிரச்சனை மிக முக்கிய காரணமாக உள்ளது.

இந்த பிரச்சனையில் இருந்து வெளி வரக்கூடிய பட்சத்திலும் அவர்கள் இருவரும் விட்டுக் கொடுக்கக்கூடிய மனநிலையில் இருந்தால் மட்டுமே மண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam