சீரியல் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து நான்கு ஐந்து ஆண்டுகள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்தது.
குறிப்பாக நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனைத்தையும் நீக்கினார். அப்போதே இந்த விவகாரம் புகைய தொடங்கியது.
ஆனால் தன்னுடைய கணவரை பிரிந்ததற்கான காரணமுமோ அல்லது பிரிந்து இருக்கிறோமா என்றோ எந்த ஒரு பதிவையும் ரச்சிதா மகாலட்சுமி வெளியிட்டது கிடையாது.
இவருடைய பதிவுகளில் எல்லாம் இவர் மட்டுமே இருந்தார். எல்லா கொண்டாட்டங்களிலும் இவர் மட்டுமே காணப்பட்டார். எனவே தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார் ரச்சிதா மஹாலக்ஷ்மி என்று ரசிகர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் தினேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். கொலை மிரட்டல் விடுகிறார்.. ஆபாசமாக பேசுகிறார்.. போன்ற விஷயங்களை முன் வைத்து புகார் கொடுத்திருந்தார் ரச்சிதா மகாலட்சுமி.
ஆனால், தினேஷ் அப்படி எதுவும் பேசவில்லை வேண்டுமென்றே போலியான புகார் கொடுத்திருக்கிறார் என்பது ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினருக்கு தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து ரச்சிதா மகாலட்சுமியை எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். தற்போது இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
மறுபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் நடிகை தினேஷின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள்… இவரை வெறுத்து.. விவாகரத்து செய்யும் அளவுக்கு பெரிதாக இவர் எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை.
சாதாரண மனிதர்களைப் போலத்தான் இவர் நடந்து கொள்கிறார். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மோசமான நபராக இவரை காண முடியவில்லை.. போட்டியாளர்களுக்கும் நடக்கும் போட்டியின் போது ஏற்படும் சண்டை தான் இவர் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டாக இருக்கிறது.. தவிர தனிப்பட்ட முறையில் இவர் மீது குற்றச்சாட்டு எதுவும் கூற முடியவில்லை.
இவரை எப்படி அச்சிதா மகாலட்சுமி பிரிய வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டிருக்கிறார் என தெரியவில்லை.. இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் இணைய பக்கங்களை கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதனால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் ரச்சிதா மஹாலக்ஷ்மி என்பது சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
நிறைய விஷயங்களை பற்றி கூறியிருக்கிறார். ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அதாவது காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள். அதைப்போலவே இன்னொரு கருத்தை கூறுகிறார் ரச்சிதா மகாலட்சுமி .
அதாவது மூச்சு திணறல் என்றால் என்ன..? என்று ஒருவரால் விளக்கி சொல்ல முடியும். ஆனால் கடலில் மூழ்குபவர்களுக்கு மட்டுமே மூச்சு திணறல் என்றால் என்ன..? என்று அவர்களுக்கு தெரியும்.
மூச்சே விட முடியவில்லை.. அந்த அளவுக்கு டார்ச்சர்.. என்று எளிமையாக கூறலாம். ஆனால் கடலில் மூழ்கியவருக்கு மட்டுமே மூச்சு விட முடியவில்லை என்றால் எந்த அளவுக்கு கொடூரமாக இருக்கும் அது எவ்வளவு டார்ச்சர் ஆக இருக்கும்.. கடல் எவ்வளவு ஆழமானது என்றெல்லாம் கடலில் மூழ்கக் கூடிய நபருக்கு மட்டும் தான் தெரியுமே தவிர அதனை எழுத்து மூலமாகவோ வீடியோ மூலமாக பார்ப்பவர்களால் கண்டிப்பாக உணர முடியாது.
அனைத்து வேதனைகளையும் கடலில் மூழ்கியவர் தான் அனுபவிப்பார் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் வீடியோவில் நீங்கள் பார்க்கக்கூடிய தினேஷ் வேறு.. ஆனால் நான் அனுபவித்த கஷ்டங்கள் வேறு.. அது எனக்கு தான் தெரியும் என்பது போல நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி சுற்றி வளைத்து கூறியிருக்கிறார்.
மேலும் நான் கர்மாவை நம்புபவள்.. உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.. என்றெல்லாம் பேசி இருக்கிறார். இதன் மூலம் ரச்சிதா மகாலட்சுமி ஏதோ ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.. ஆனால் அதனை தன் வாயால் கூறினால் பிரச்சனையாக கூடும் என்பதால் அதுவாக வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறார் என்றும் தெரிகிறது. இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.