“கணவர் கூறிய அந்த ஒரு வார்த்தை…” – போட்டு உடைத்த ரச்சிதா மகாலட்சுமி..! – குழப்பத்தில் ரசிகர்கள்..!

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவு பெற்றது இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கலந்து கொண்டார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து தன்னுடைய நன்றி பதிவு ஒன்றை பதிவேற்றுகிறார். இதில் இத்தனை நாட்களாக எனக்கு ஆதரவு கொடுத்து வந்த உங்களுக்கு நன்றி.. நீங்கள் இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என கூறியிருந்தார்.

ஆனால் இது ரசிகர்களுக்கானதா..? அல்லது இவருடைய கணவருக்கானதா..? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் ஆழ்ந்திருக்கின்றனர். அதாவது நடிகை ரச்சிதா மகாலட்சுமி அவரது கணவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வெளியானது.

கிட்டத்தட்ட அதுதான் உண்மையும் கூட. பிரிவும் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது தன்னுடன் நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரையும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரச்சிதா மகாலட்சுமிக்கு ஆதரவாக பல கருத்துக்களை அவருடைய கணவர் தினேஷ் பதிவு செய்து வந்தார்.

அவர் பதிவு செய்ததாவது என் மனைவி ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பார்ப்பதற்கு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ரச்சிதாவை 24 மணி நேரமும் என்னால் பார்க்க முடியும் என்பதற்காகவே நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகிறேன்.

அவர் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்முடைய ஆசை. ஆனால், 91 வது நாள் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல என்னையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வோம் என்று பேசியிருந்தார். தற்பொழுது நடிகை ரச்சிதா மகாலட்சுமி எழுதியுள்ள இந்த பதிவு யாருக்காவது ரசிகர்களுக்காக அல்லது நடிகை தன்னுடைய கணவருக்கு நன்றி கூறியிருக்கிறாரா..? என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

மறுபக்கம் ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் அவருக்கு ஆதரவாக தான் இருக்கிறார். அவரிடம் ஏதும் கோபம் இல்லை என்றே தெரிகிறது. எனவே நடிகர் தினேஷும் ரச்சிதா மகாலட்சுமி-யும் அவருடன் மனம் விட்டு பேசி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam