சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி-க்கு இரண்டாவது திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொலைக்காட்சித் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரின் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

திருமணத்திற்கு பிறகும் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார். சீரியல்களிலும் ரொமான்டிக்கான காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். குறிப்பாக அவருடைய கணவர் தினேஷ் உடன் இணைந்து நடித்த நாச்சியார்புரம் என்ற சீரியலில் இவர் நடித்தபோது இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், உன்னுடைய குடும்பத்தினருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது.. பண உதவியோ அல்லது பொருளுதவியோ.. நீ உன்னுடைய குடும்பத்திற்கு எதுவும் செய்யக்கூடாது என்று கணவர் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரட்சிதா மகாலட்சுமிக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனம் வெறுத்துப்போன ரச்சித்தா மகாலட்சுமி தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நாயகியாக நடித்திருந்த நடிகை ரச்சிதா கணவனை இழந்து குழந்தையை வளர்க்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த சீரியலில் வரும் கதை என்னுடைய சொந்த வாழ்க்கையுடன் ஒத்துப்போகிறது என்று ஒரு பேட்டியில் பேசியதன் மூலம் இவர் நிஜமாகவே கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற விடையம் அம்பலமானது.

இந்நிலையில் இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்று சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் நடிகை ரஞ்சிதா மகாலட்சுமி என்றும் கூறப்படுகிறது.

இந்த இயக்குனர் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர் என்ற தகவல் மட்டும் தற்போதைக்கு வெளியாகியுள்ளது. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில் செய்யும் தொழில் அதிபராகவும் திகழ்ந்து வருகிறார்.

தன்னுடைய நீண்டகால நண்பராக இருக்கும் இவரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இவர் யார்..? என்ன விபரம்..? என்று தெரியவரும் என்று கூறுகிறார்கள் சின்னத்திரை வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version