கணவரை பிரிந்த நிலையில் காதலில் விழுந்த ரச்சிதா மகாலட்சுமி..! அவரே சற்று முன் வெளியிட்ட வீடியோ..!

சின்னத்திரை இருந்து பெரிய திரைக்கு சென்ற பல நடிகைகள் பற்றி உங்களுக்கு தெரியும். அந்த வகையில் சின்னத் திரை சீரியல்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ரச்சிதா மகாலட்சுமி அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற வீடியோ அனைவரையும் சுண்டி இழுத்துள்ளது.

இதற்குக் காரணம் என்ன இந்த வீடியோவில் அப்படி என்ன இருந்தது என்பது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

நடிகை ரச்சிதா மகாலட்சுமி பற்றி பேசும் போது சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருக்கக் கூடிய இவர் தமிழில் பல சூப்பரான சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

அந்த வகையில் இவர் முதல் முதலாக பிரிவும் சந்திப்போம் என்ற தமிழ் சீரியல் மூலம் அறிமுகம் ஆனதை அடுத்து இவருக்கு அதிகளவு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் நடிப்பில் உருவான RANGANAYAKA திரைப்படத்தின் ட்ரைய்லர் கூட அண்மையில் வெளி வந்து அனைவரையும் கவர்ந்தது.

கணவரை பிரிந்த நிலையில் காதலில் சிக்கி..

நடிகை ரச்சிதா ஏற்கனவே நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். இதனை அடுத்து இவர்கள் இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. மேலும் குறித்து பல்வேறு விஷயங்கள் இணையங்களில் வெளி வந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு குடும்பத்தாரும் அவர்களை சேர்ந்து வாழ வைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிந்து தற்போது ரச்சிதா அவர் அம்மாவோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிக் பாஸ் நண்பர்களோடு அடிக்கடி அவுட்டிங் சென்று ஜாலியாக இருப்பது குறித்து அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட அவை வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவி விடும்.

சற்றுமுன் வெளி வந்த வீடியோ..

அந்த வகையில் இவர் தற்போது செல்ப் லவ் என்று கூறி காதல் சிம்பலை காட்டி ஒரு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஒரு வேலை இவர் காதலில் விழுந்து விட்டாரா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் தெலுங்கு பட இயக்குனர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல்வேறு தகவல்கள் இணையங்களில் பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அந்த விஷயத்தையும் இணைத்து ரசிகர்கள் காதும் காது வைத்த படி பேசி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலான விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் இது போல ரச்சிதா அடிக்கடி படு கிளாமரான உடையில் இன்ஸ்டாவில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதால் இவருக்கு மேலும் திரைப்பட வாய்ப்புகள் அதிகளவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version