முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா..! – வியர்த்து விறுவிறுத்து கிடக்கும் ரசிகர்கள்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா ( Rachitha Mahalakshmi ). இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்.

இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2015ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் சீரியலில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்து இருந்தார்கள்.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு ரட்சிதா மகாலட்சுமி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்தார் சமீபத்தில் சில காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீச்சல் உடையில்..

மேலும், வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ள ரச்சிதா மகாலட்சுமி முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது. வெப் சீரிஸ் மற்றும் சினிமாவில் தொடர்ந்து பயணிக்கவே சீரியல்களில் இருந்து விலகியுள்ளார் அம்மணி என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam