Ulti.. இது தான் ரியல் டிவிஸ்டு.. தினேஷ் ரச்சிதாவை பிரித்த நபர் இவரு தானாம்..! யாருன்னு பாருங்க..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் ஜோடியாக நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்தது. ஆனால் 8 ஆண்டுகள் ஆகியும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி குழந்தை பாக்கியம் இல்லாதது இருவருக்கும் இடையே வாக்குவாதம் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் உள்ளிட்டவற்றை உருவாக்கும் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.

இப்படி சண்டைகள் வருவதும் போவதுமாக இருந்தபோது நடிகர் தினேஷ் ரச்சிதா மகாலட்சுமி குறித்து அவருடைய மனம் நோகும்படியாக ஏதோ ஒன்றை பேசியிருக்கிறார் என்று கூறுகிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்கள்.

அதனை மறக்க முடியாமல் தினேஷை வெறுக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார். தற்பொழுது தான் பேசியது தவறுதான் என்று ரச்சிதமாக லட்சுமியிடம் தினேஷ் கெஞ்சி கேட்டும் கூட தினேஷ் கூறிய சில விஷயங்களை அவர் செய்த சில விஷயங்களை மறக்கும் சூழ்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி இல்லை என்பதால் தினேஷை ஏற்றுக் கொள்ளும் முடிவில் ரச்சிதா மகாலட்சுமி இல்லை என்று தெரிகிறது.

அப்படி என்னதான் தினேஷ் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால், கோபத்தில் அடித்து விட்டால் கூட அந்த விஷயம் மறந்து விடும்.. வாயால் வார்த்தைகளை விட்டு விட்டால் அதனை மறைய வைக்கவே முடியாது அது நீங்க வடுவாக அமைந்துவிடும் என்று பழமொழிகளை நாம் கேட்டிருக்கிறோம்.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற  ஐய்யனின் குரள் நூறு சதவீதம் உண்மையானது. எனவே மனதை நோகடிக்கும் செய்யும் விதமாக கோபத்தில் தினேஷ் சில வார்த்தைகளை விட்டு இருக்கலாம் என தெரிகிறது.

அதனால் தான் ரச்சிதா மகாலட்சுமி அவரை வெறுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். தற்போதும் கூட தினேஷ் ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து வாழும் முடிவில் தான் இருக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது.

பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய மனைவி கலந்து கொண்டு வெற்றி பெற முடியவில்லை.. தற்போது நான் கலந்து கொண்டிருக்கிறேன் இதில் வெற்றி பெற்று ரட்சிதாவிற்கு இந்த வெற்றியை நான் சமர்ப்பிப்பேன் என்றெல்லாம் பிக் பாஸ் வீட்டில் பேசி இருந்தார் தினேஷ்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தினேஷ் ரச்சிதா மகாலட்சுமி இருவரையும் பிரித்து விடுவதற்கு துணையாக ரச்சிதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு நடிகர் பற்றி தான் தற்போது இணைய பக்கங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த நடிகர் வேறு யாருமில்லை. தற்போது நடிகர் தினேஷ் கலந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் போட்டியில் அவரும் போட்டியாளராக இருந்து வருகிறார்.

ஆம் நடிகர் விஷ்ணு தான் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் பிரிவதற்கு தினேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு போன்ற விஷயங்களில் ரச்சிதா மகாலட்சுமிக்கு துணையாக இருந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நடிகர் விஷ்ணு ரட்சிதா மகாலட்சுமி இருவரும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு தோழிக்கு செய்யும் உதவியாக நடிகர் விஷ்ணு, ரச்சிதா மகாலட்சுமியின் தரப்பு விளக்கத்தை மட்டும் கேட்டு அவருக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுத்திருக்கலாம்.

தினேஷ் மீது இல்லாத பொல்லாத புகார்களை காவல் நிலையத்தில் கொடுக்க வைத்து பரபரப்பை கிளப்பியதன் பின்னணியின் நடிகர் விஷ்ணுவின் வேலையும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் நடிகர் தினேஷ்.. விஷ்ணு மீது எந்த அளவுக்கு கோபமாக இருக்கிறார்.. என்பதை பிக் பாஸ் வீட்டில் பார்க்க முடிந்தது. அவரை பல இடங்களில் மோசமாக திட்டியிருக்கிறார்.

எப்போடா காரணம் கிடைக்கும் போட்டு விளாசலாம் என்பது போல விஷ்ணுவை கடுமையாக திட்டி இருக்கிறார் தினேஷ். இது போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது.

இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் இதுதான் இருக்கிறதுலயே மிகப் பெரிய டிவிஸ்டு என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam